மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச சீமேந்து பக்கற்றுக்களை வழங்குவதற்கு தடையாக உள்ள பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்.-Photos
மன்னாரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச சீமேந்து பக்கட்டுக்கள் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை எனவும்,தாழ்வுபாட்டு கிராமம் உற்பட அப்பகுதிக்கு பொறுப்பான பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உரிய முறையில் சீமேந்து பக்கட்டுக்களை வழங்காது பயனாளிகளை அவ மரியாதை செய்வதாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னாரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஏழை மக்களுக்கு கடந்த பல மாதங்களாக இலவச சீமேந்து பக்கட்டுக்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் தற்போது மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக சீமேந்து பக்கட்டுக்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அப்பகுதிக்கு பொறுப்பான பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சினால் வீடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு சீமேந்து பக்கட்டுக்களை வழங்கும் திட்டம் பல பாகங்களிலும் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடுகளை பூர்த்தி செய்யாத ஏழை குடும்பங்களுக்கு மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சீமேந்து பக்கட்டுக்களை விநியோக்கித்து வருகின்றனர்.
இதற்கு அமைவாக மேற்படி தேசிய வீடமைப்பு அதிகார சபை தமது தொழில் நுட்ப உத்தியோகத்தர்களை பயனாளிகளின் வீடுகளை பார்வையிடச் செய்ததன் பின் பொருத்தமான பயனாளிகளுக்கு குறித்த சீமேந்து பக்கட்டுக்களை விநியோகித்து வருகின்றனர்.
எனினும் மன்னார் பிரதேசச் செயலகத்துடன் இணைந்து செயல்படும் சில கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சீமேந்து விநியோகத்தின் போது உரிய பயனாளிகளுக்கு அதனை கிடைக்கச்செய்வதில் தடையாக இருப்பதுடன்,அக்கிராமத்தில் தமக்கு தேவையானவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விதம் குறித்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களினால் சீமேந்து பக்கட்டுக்களை பெறுவோர் அதனை பெற்றுக்கொள்வதற்கு எவ்விதத்திலும் தகுதி அற்றவர்கள் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலே கடந்த வியாழக்கிழமை(15) மன்னார் தாழ்வு பாட்டு கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட சீமேந்து விநியோகத்தின் போது உரிய முறையில் தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுமதி மறுத்ததுடன்,குறித்த கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்னுக்கு முன்னர் அவரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் குறித்த பெண்ணை குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மக்கள் முன்னிலையில் பரிகாசம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கவலை தெரிவித்தார்.
குறித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தரின் பொறுப்பற்ற முறையில் சுயநலத்துடன் செயற்பட்டமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச சீமேந்து பக்கற்றுக்களை வழங்குவதற்கு தடையாக உள்ள பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 18, 2016
Rating:

No comments:
Post a Comment