அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம்-Photos


மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் (Shelly Whiting) இன்று புதன் கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினை சந்தித்து உரையாடியுள்ளார்.

-குறித்த சந்திப்பின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்,மாவட்டத்தின் அபிவிருத்திகள்,அரசியல் பிரச்சினைகள்,உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்தiதுயாடப்பட்டது.

மேலும் கனேடிய அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சகல விதமான உதவித்திட்டங்களுக்கு மன்னார் ஆயர் இல்லம் சார்பான நன்றிகள் தெரிவிக்கப்பட்டதோடு,மேலும் கனேடிய அரசு மன்னார் மாவட்டத்திற்கு தமது உதவித்திட்டங்களை மேலதிகமாக வழங்கி பாதீக்கப்பட்டு பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த சந்திப்பு மாலை 3 மணிமுதல் 4 மணிவரையிலான ஒரு மணி நேரம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம்-Photos Reviewed by NEWMANNAR on September 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.