இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் மன்னார் விஜயம்- சுற்றுலாத்துறை சார் முகாமைத்துவப் பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.-Photos
மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்; வகையில் உலக கனேடிய பல்கலைக்கழக சேவை(W.U.S.C) நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த சுற்றுலாத்துரை சார் முகாமைத்துவப் பயிற்சியை பூர்த்தி செய்த 30 இளைஞர் யுவதிகளுக்கு இன்று புதன் கிழமை(21) இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் (Shelly Whiting) அவர்களினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் ஆஹாஸ் விடுதியில் இன்று புதன் கிழமை மதியம் 12.15 மணியளவில் குறித்த புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக்( Shelly Whiting) ) புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.
உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவன அதிகாரிகள்,சுற்றுலாத்துரை சார் அதிகாரிகள்,கல்வி நிறுவன அதிகாரிகள் ,மாணவர்களின் பெற்றோர்கள்,என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
இலங்கைக்கான கனேடிய தூதுவர் செல் வைட்னிக் மன்னார் விஜயம்- சுற்றுலாத்துறை சார் முகாமைத்துவப் பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 21, 2016
Rating:

No comments:
Post a Comment