மனிதாபிமானம் தமிழர்களிடேயே செத்துவிட்டாதா? பல்கலைக் கழக மாணவனுக்கே இந்த நிலை என்றால்? சாதாரண மக்களிற்கு?-Photos
பாதிக்கப்பட்ட மாணவனின் குரல்:
வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் தனியார் பேரூந்து(62-6679) மாத்திரமே பம்பைமடு, பூவரசங்குளம் போன்ற இடங்களிற்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்தது.
கொழும்பிலிருந்து பல மணித்தியாலங்கள் பயணித்து வவுனியாவில் நடு வெயிலில் 12.30 மணிக்கு இறங்கிய எனக்கு வவுனியா பம்பைமடுவிற்கு அருகில் உள்ள கம்பஸூக்கு செல்ல தனியார் பேரூந்தில்(1.p.m) ஏறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
தனியார் பேருந்தில் ஏறச் சென்ற என்னைத் தவறான பேரூந்தொன்றைச் சுட்டிக் காட்டி இதில் போங்கள் என்றார் நடத்துனர்.
இது போகாது என அவரிடம் கூறிய போது தங்களால் இதில் ஏற்ற முடியாது என சாரதி பேசத் தொங்கினார். மிகவும் பாரமான எனது இரு பைகளையும் பஸ்ஸில் வைத்துவிட்டு, பஸ் வெளிக்கிடும் போது ஏறுகிறேன் என்றேன்.
அதை மறுத்த நடத்துனர் தமக்கு மன்னார் தவிர்ந்த வேறு யாரையும் ஏற்ற வேண்டாம் என சட்டம் போட்டுள்ளனர் என்றார்.
யார் சட்டம் போட்டது எனக் கேட்டேன், கொழும்பு தனியார் பேரூந்து நேரக்கட்டுப்பாளர் உள்ள இடத்தினைச் சுட்டிக் காட்டி அவர்கள்தான் தனியார் பேரூந்து பொறுப்பாளர்கள் என்றனர்.
அங்கே ஒரு சிங்கள நேரக் கட்டுப்பாளர் இருந்தார். அவர் அமைதியாகவும் கடமையுணர்வுடனும் பதிலளித்தார். தாம் அதற்கு பொறுப்பில்லை.மன்னார் பேரூந்து நிற்கும் அதே தெருவில், மன்னார் உள்ளிட்ட பேரூந்துகளிற்கு பொறுப்பான தனியார் நேரக் கட்டுப்பாளர்கள் உள்ளனர் என்றார்.
அவர் ஒரு தமிழர்.முறைப்பாடு செய்தேன். இது தனியார் பேரூந்து இது இப்படித்தான்.வேறு பேரூந்துகளில் போகச் சொன்னார்.வேறு பேரூந்துகள் சேவையில் தற்சமயம் இல்லை என்றேன். அதற்குள் பேரூந்து சாரதியும், வேறு ஒரு நபரும் அவ்விடம் வந்தனர். தனியார் பேரூந்து இது இப்படித்தான் என்றார். நான் நேரக் கட்டுப்பாளரை நோக்கி,
பொதுச் சேவையிலுள்ள பேரூந்தில் பயணியை அவமதிக்கும் வகையில் ஏறாதே என்று சொல்வது நியாமா என கேட்டேன்.
"நீர் உம்மால முடிஞ்சதை செய்யும் " என்றார்.
"தங்களோடு மரியாதையாக உரையாடினேன்.தங்களிற்கு மதிப்பளித்து.ஆனால், பொறுப்பான இடத்தில் உள்ளீர்கள் என்று...ஆனால், மரியாதையாகவும்,மனிதாபிமானமாகவும் கதைக்கத் தெரியாத உங்களோடு நியாம் பற்றிக் கதைச்சு பிரியோசனம் இல்லை" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினேன்.
"செய்ய முடிஞ்சதை செய்....இது தனியார் பேரூந்து...அரசாங்கம் இல்லை...இது எங்கட பஸ்" நாகரிகமற்ற நேரக் கட்டுப்பாளர் கத்தியது காதுகளில் தொடர்ந்து கேட்டது. சேற்றில் கல் எறிந்தால் எனது முகத்திற்குதானே சேறு தெறிக்கும்.அமைதியாக விலகினேன்.
அச் சமயம் வேறு பேரூந்துகள் இல்லாததால், முச்சக்கர வண்டியிலேயே பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
பொதுச் சேவையிலுள்ள தனியார் பேரூந்து நடத்துனர்கள்,சாரதிகள் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதம் பொருத்தமானதாக இல்லை.ஒப்பீட்டு ரீதியில், சிங்களப் பிரதேச நடத்துனர்களைவிட, தமிழர்கள் மோசமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. பொறுப்பற்றவர்களை பொறுப்பான இடங்களில் வைப்பதனால், நீதியை பெறுவது எவ்வாறு?
இப்படிக்கு.
மாற்றத்தை விரும்பும்
மாற்றத்தை விரும்பும்
மனிதாபிமானம் தமிழர்களிடேயே செத்துவிட்டாதா? பல்கலைக் கழக மாணவனுக்கே இந்த நிலை என்றால்? சாதாரண மக்களிற்கு?-Photos
Reviewed by NEWMANNAR
on
September 18, 2016
Rating:

No comments:
Post a Comment