மடு பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் மரம் நாட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.-Photos
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் மரம் நாட்டும் நிகழ்வு மடு வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் நேற்று(15) வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பாடசாலைகளில் பலன் தரும் மரங்களை நாட்டி வைக்கும் வகையில் மடு கல்வி கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் மரம் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது மடு வலயக்கல்வி திணைக்களத்தின் அதிகாரி,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தனது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒலி பெருக்கி தொகுதியினை பாடசாலைக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
மடு பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் மரம் நாட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 16, 2016
Rating:
No comments:
Post a Comment