மன்னாரில் முதற்கட்டமாக 180 இளைஞர்,யுவதிகளுக்கு சுய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள காசோலைகள் வழங்கி வைப்பு-Photos
மன்னார் மாவட்ட இளைஞர்,யுவதிகளுக்கு சுய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் இன்று வியாழக்கிழமை காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியூதீனின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கூட்டுறவுச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக மன்னார் மாட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 180 பயணாளிகளுக்கு 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் 25 ஆயிரம் ரூபாய் வரை நிதி காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.என்.முனவ்பர் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,அமைச்சரின் இணைப்பாளர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதகாரிகள்,இளைஞர்,யுவதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முதற்கட்டமாக 180 இளைஞர்,யுவதிகளுக்கு சுய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள காசோலைகள் வழங்கி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
September 30, 2016
Rating:

No comments:
Post a Comment