இன்றைய கேள்வி பதில்-30.09.2016
கேள்வி:−
மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் ஐயா!நான் மன்னாரிலிருந்து செல்லத்துரை.நான் அரசாங்கத்தில் 25வருடங்களாக பணி புரிகிறேன்.நான் ஓய்வு பெறுவது பற்றி சிந்தித்துள்ளேன்.எனவே "எனது ஓய்வூதியத்தினை எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும்"என்ற தகவல்களை வழங்கினால் எனக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பதில் :−
அன்பு சகோதரரே!தாங்கள் இதனை தங்களது திணைக்களத்திலிருந்தே இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.உங்களது திணைக்கள உத்தியோகத்தரே அதற்கான வேலைத் திட்டங்களை செய்யும் கடைமையுள்ளவர்.இருப்பினும் தங்களுக்கு பதிலளிக்க வேண்டியது எனது கடமை.
"ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிக்கும் எந்தவொரு விண்ணப்பதாரியும்,வயது பூர்த்தியடைந்து சேவையில் இருந்து ஓய்வு பெறும் போது குறித்த காலத்திற்கு முன்பே விண்ணப்பித்தல் வேண்டும்.
மேற்படி விண்ணப்பதாரி ஊழியர் சேமலாப நிதியப் பிரிவினால் காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
ஆண்− 55 வயதினைப் பூர்த்தி செய்த பின்னர்ஓய்வூ பெறல்.
பெண் - 50 வயதினைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வூ பெறல்.
மேற்படி தேவைப்பாட்டினை நிரூபிக்கும் பொருட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
1. பிறப்புச் சான்றிதழ்
2.தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதி.அது தொழில் தருநராலோ பிரதேச செயலாளராலோ அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
3.பணத்தை வரவு வைக்கும் பொருட்டு தனக்குச் சொந்தமான வங்கிப் புத்தகத்தின் நிழற் பிரதி.
செயற்பாடு கட்டம் கட்டமாக
படிமுறை 1 :விண்ணப்பதாரி படிவத்தைப் பெற்றுக்கொள்ளல்.
படிமுறை 2 :பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தில் அவசியமான நற்சாட்சிப்படுத்தல்களை செய்தல்.
படிமுறை 3 :பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை அவசியமான ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்.
படிமுறை 4:தொழில் திணைக்களத்தின் ஏற்புடைய அலுவலர்களால் பரிசீலிக்கப்படல்.
படிமுறை 5 :இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவுக்கு அனுப்பி வைத்தல்
படிமுறை 6 :கணக்கில் வரவில் உள்ள பணத்தொகையை இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவு விடுவித்தல்.
தேவைப்பாடுகளை பூர்த்தி செய்திராத விண்ணப்பப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.
சேவைக்காக எடுக்கும் காலம்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் அவசியமான சான்றிதழ்களை ஒப்படைத்தால் ஒரு மாத காலமே செல்லும். குறைபாடுகள் நிலவுமாயின் அவற்றைப் பூர்த்தி செய்யும் வரை காலம் எடுக்கும்.
வேலை நேரங்கள்
கிழமை நாட்களில் - திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம் - மு.ப. 9.00 முதல் பி.ப. 03.30 வரை
(விடுமுறை நாட்கள்- அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத் தினங்கள் தவிர்ந்த)
விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாகவே விநியோகிக்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
விண்ணப்பப் பத்திரம்
#டீ அட்டை
பிறப்புச் சான்றிதழ்
(பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரின் அனுமான வயதுச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.)
#தேசிய அடையாள அட்டையின் பிரதி
(தொழில் தருநரால் நற்சாட்சிப்படுத்தப்படல் வேண்டும். நிறுவனம் மூடப்பட்டிருப்பின் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் நற்சாட்சிப்படுத்தல் வேண்டும்)
#பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் பிறந்த தினத்தை தோட்டத்துரை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
(1967 இன் 15 ஆம் இலக்க இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
நிறுவனம் மூடப்பட்டிருப்பின் ஆட்களின் விபர முன்னுரிமை)
#நிறுவனம் மூடப்பட்டுள்ள வேளையில் புதிய மாற்றம் இருப்பின் இழப்பு எதிரிட்டுக் கடிதம்.
விசேட நிலைமைகள்
விண்ணப்பதாரியின் டீ அட்டை இல்லாதவிடத்து ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்கு அறிவிக்க வேண்டும்.
ஒரு ரூபா கட்டணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட ‘டீ’ மாதிரிப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலமாக இணைப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உதவித் தொழில் ஆணையாளர்,
மத்திய கடிதக் கோவைப் பிரிவு,
ஊழியர் சேமலாப நிதியம்,
தொழில் திணைக்களம்,
கொழும்பு 05
எனும் முகவரியில் இருந்து மாத்திரமே இணைப் பிரதிகள் விநியோகிக்கப்படும்.
நேரடியாக வருவதன் மூலமாகவோ தபால் மூலமாகவோ இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு ரூபா கட்டணத்தை காசோலை அல்லது காசுக் கட்டளை மூலமாகவோ இப்பிரிவுக்கு வந்து செலுத்துவதன் மூலமாகவோ இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அமைப்பு பற்றிய தகவல்
Department of Labour
Labour Secretariat,
Narahenpita,
Colombo 05.
*******
Mr. P. W. M. G. Wickramasinghe
தொலைபேசி:+94 11 2581142/3, +94 11 2581146,+94 11 2581148, +94 11 2369373
தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2581145
மின்னஞ்சல்:commgen@labourdept.gov.lk; cgldol@sltnet.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk
**********
இன்றைய கேள்வி பதில்-30.09.2016
Reviewed by NEWMANNAR
on
September 30, 2016
Rating:

No comments:
Post a Comment