போர் இரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கிய இராணுவ அதிகாரிக்கு உயர் பதவி....
போர் இரகசியங்களை அமெரிக்காவிற்கு வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதான இரகசியங்களை, குறித்த இராணுவ மேஜர் ஜெனரல் அமெரிக்காவுக்கு வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
போர் இரகசியங்களை தமக்கு வழங்கியதாக அமெரிக்காவும் ஒப்புக்கொண்டிருந்தது என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இராணுவ மேஜர் ஜெனரலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்த இராணுவ மேஜர் ஜெனரல் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
தென் மாகாண அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமான இந்த இராணுவ மேஜர் ஜெனரலுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சில் உயர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஊடகத்தின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து வெளிவிவகார அமைச்சு பதில் எதனையும் இதுவரையில் வழங்கவில்லை.
போர் இரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கிய இராணுவ அதிகாரிக்கு உயர் பதவி....
Reviewed by Author
on
September 29, 2016
Rating:

No comments:
Post a Comment