அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயதுசிறுவனின்....
அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை அமெரிக்க பொலிசார் நிறைவேற்றியுள்ள சம்பவம் பெற்றோரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பார்த் படேல் என்ற 9 வயது சிறுவன் அமெரிக்காவின் ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014 ஆண்டு Ewing Sarcoma என்ற நோய் தாக்கப்பட்டு புற்றுநோயுக்கு ஆளானார்.
கடந்த சில வாரங்களாக நோயின் தாக்கம் அதிகமானதால் அவரால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. மேலும் சில தினங்களில் மருத்துவர்கள் சிறுவன் இறந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பார்த் படேல் பொலிஸ் மீது மிகுந்த ஆர்வம் என்பதால், அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோர்கள் அம்மாகணத்தில் உள்ள பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் நிலைமையை உணர்ந்த பொலிசார், சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக 100 பொலிசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் சில சிறப்பு அதிகாரிகள் என பலர் சிறுவனின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சிறுவனுக்கு பிடித்த உடையான பொலிசாரின் உடையை அணிய வைத்து, அதற்கு இணையாக வாக்கி டாக்கி கொடுத்து பொலிசாரின் வாகனத்தில் சிறுவனை பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் பலரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தொடியது.இது தொடர்பான வீடியோ தற்போது அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயதுசிறுவனின்....
Reviewed by Author
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment