அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் - 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி


வவுனியாவில் தீபாவளி திருநாளான இன்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்மற்றும் விபத்து காரணமாக கடந்த 3 மணிநேரத்தில் வவுனியா வைத்தியசாலையில் 10பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும்வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீபாவளி தினமான இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலான 3மணிநேரத்தில் வவுனியாவில் பல பகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டமோதல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் ஆறு பேரும், இக் காலப்பகுதியில்இடம்பெற்ற விபத்து காரணமாக 04 பேரும் வவுனியா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, மதினா நகர் பகுதியில் தமிழ் இளைஞர்கள் செலுத்தி வந்தமுச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டபோது இப்பகுதி முஸ்லீம் இளைஞர்கள் உதவிக்காகசென்றுள்ளனர்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் பூந்தோட்டம் பகுதியில் இருந்துவந்த இளைஞர் குழுவொன்று உதவிய முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில்ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லீம் இளைஞர்ஒருவரும் காயமடைந்ததாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலையில் இரு தமிழ் இளைஞர்கள்அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா, கற்குழி பகுதியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்றமோதல் மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரணிக்குளம் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு விபத்தின் காரணமாக நால்வர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட பத்து பேரும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடைப்பட்ட 3மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

இதேவேளை வவுனியாவில் பல இடங்களிலும் பொலிஸார் கடமையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மதினா நகர் பகுதியில் வவுனியா பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள்நோயாளர் தவிர்ந்த வேறு எவரும் உட்பிரவேசிக்க முடியாதவாறு வாயிலில் பொலிஸார்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் பூந்தோட்டம், மதீனா நகர், கற்குழி, பம்பைமடு உள்ளிட்ட பலபகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் - 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Author on October 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.