அமெரிக்க ஜனாதிபதியாக மிட்செல் ஒபாமா?
மிட்செல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அவருக்கு ஜனாதிபதிக்கான பொறுமை இல்லை என்று ஜனாதிபதி ஒபாமா பதிலளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியா பதவி வகித்து வரும் ஒபாமாவின் பதவி காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் அமெரிக்க மக்கள் தங்களது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய உள்ளனர்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹிலாரி கிளிண்டணை ஆதரித்து பல மாகாணங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார் மிட்செல் ஒபாமா. இந்த ஆண்டின் தேர்தல் பிச்சார களத்தில் மிகவும் பிரபலமான நபராகவும் அவர் வலம் வந்த வண்ணம் உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று கரோலினா மாகாணத்தின் வடபகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்த மிட்செல் ஒபாமாவுக்கு சுமார் 10,000 ஆதரவாளர்கள் ஆரவாரமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
இதில் பெரும்பாலான ஆதரவாளர்கள் ஹிலாரி கிளிண்டன் போன்று மிட்செல் ஒபாமாவும் ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு நேரிதிரான கருத்தை அமெரிக்க ஜனாதிபதியும் மிட்செலின் கணவருமான ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
எதிர்வரும் எந்த ஜனாதிபதி தேர்தலிலும் மிட்செல் போட்டி இடுவதாக இல்லை. அவர் மிகவும் திறமையானவர் மட்டுமல்ல புத்திசாதூர்யமானவரும் கூட. ஆனால் அவருக்கு ஒரு ஜனாதிபதிகாக தேவையான பொறுமை இல்லை. மட்டுமின்றி தம்மை ஒரு தேர்தல் போட்டியாளர் என்ற நிலையில் கூட முன் நிறுத்திக்கொள்ள அவரால் முடியாது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக மிட்செல் ஒபாமா?
Reviewed by Author
on
October 30, 2016
Rating:

No comments:
Post a Comment