முல்லைத்தீவில் பொது கிணற்றுக்குள் இருந்து குண்டு மீட்பு!
முல்லைத்தீவு முறிகண்டி ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பொது நோக்க மண்டப கிணறு ஒன்றில் இருந்து கிளைமோர் குண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தின் கிணற்றினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நேற்று (25) குண்டு மீட்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் கிராமத்திலேயே குண்டு நேற்றய தினம் மீட்கப்பட்டுள்ளது,
குறித்த கிணறு சுத்திகரிக்கப்படாத நிலையில் நீண்டகாலம் மக்கள் பயன்படுத்திவந்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கன் இலங்கை மிசன்திருச்சபையினால் நடார்த்தப்பட்டுவரும் முன்பள்ளி சிறுவர்களும் கிணற்று நிரினை பயன்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிணற்றிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டிருந்தமை கிராம மட்ட அமைப்புகளினதும் அரச அதிகாரிகளினதும் கவன குறைவாகவே கருத வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் பொது கிணற்றுக்குள் இருந்து குண்டு மீட்பு!
Reviewed by NEWMANNAR
on
October 26, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 26, 2016
Rating:



No comments:
Post a Comment