அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் இன்று: தையல் இயந்திரம் கண்டுபிடித்த எலியாஸ் ஓவே நினைவு தினம்.....


தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலியாஸ் ஓவே நினைவு தினம் இன்று.

முன்னதாக தாமசு செயிண்ட் என்ற அறிஞர் கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையை கொண்டு வந்தார். அவர் அதற்கான காப்புரிமையை பெற்றும் அதன் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து ஈடுபடாமல் இறந்து போனார். அதையடுத்து 1790 இலிருந்து ஐசாக் சிங்கர் உட்பட கிட்டத்தட்ட 80 பேருக்கு மேல் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி எலியாசு ஓவே இதற்கான காப்புரிமையை முதன் முதலாக பெற்றார். இதன் மூலம் தையல் எந்திர வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாளராக இவர் பெயர் பதிவாயிற்று.

அமெரிக்காவின் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் 1819 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி பிறந்தார் எலியாசு ஓவே. இவரின் தந்தை பெயரே இவருக்கும் இட்டதால் இவர் எலியாசு ஓவே இளையவர் என அழைக்கப்பட்டார். எலியாசுவின் தந்தை ஓர் உழவர் உள்ளூரில் மருத்துவராகவும் செயல்பட்டு வந்தார்.

எலியாசு 1834 இல் லோவெல் என்ற ஊரில் அமைந்திருந்த நெசவாலை ஒன்றில் பணியில் சேர்ந்தார். நெசவுத்தறி நாடா இயங்கும் முறை, நெய்யப்படும் துணி வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு சிறந்த முறையில் கற்றுக் கொண்டார். அதன் பிறகு கேம்பிரிட்ஜில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் எந்திரப் பொறியாளரின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் நாதனியல் பேங்க்சு போர்ப்படைத் தளபதியாகவும், பின்னர் நாடாளுமன்ற அவைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

1838-இல் போசுடனில் கார்ன்ஹில் எனுமிடத்தில் அரி டேவிசு என்ற தலைமைக் கைவினைஞரின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவர் தைக்கும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். 1941 ஆம் ஆண்டு மார்ச்சு 3 ஆம் தேதி இவருடைய 22 ஆவது வயதில் எலிசபெத் ஏம்சு என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.

1844 இல் இவருடைய வசதி மிக்க நண்பர் ஜார்ஜ் பிசர் என்ற வணிகர் எலியாசுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், துணி தைக்கும் தொழிலில் புதிய எந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த எலியாசு 1844 அக்டோபரில் ஓர் அடிப்படை தையல் எந்திரத்தை உருவாக்கினார்.

இது மரம் எஃகிரும்பு, கம்பி, அதனுடன் பிணைத்திருக்கும் ஆணிகள் மற்றும் ஊசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. அதையடுத்து 1845 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடர்ந்து இயங்கும் தையல் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். 1846 இல் இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. இவருடைய தையல் எந்திரம் 1867 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் தங்கப்பதக்கம் வென்றது. எலியாசு ஓவே 1867 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தனது 48 வது வயதில் காலமானார்.

வரலாற்றில் இன்று: தையல் இயந்திரம் கண்டுபிடித்த எலியாஸ் ஓவே நினைவு தினம்..... Reviewed by Author on October 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.