கின்னஸ் சாதனை படைத்த தமிழன்....
தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விடாமல் தட்டி கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதமநாராயணன் என்பவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில், சிறுவயதிலேயே கிரிக்கெட் சிறப்பாக விளையாடும் இவருக்கு கிரிக்கெட் மட்டையில் அதிக நேரம் பந்தை தட்டிக் கொண்டிருக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதையறிந்த, அவரது நண்பர்கள் இந்த பழக்கத்தை வைத்தே உலக சாதனை செய்யலாம் என ஊக்கபடுத்தவே தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க ஏற்பாட்டில், மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் மட்டையால் தொடர்ந்து 6.14 மணி நேரம் பந்தை கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைத்தார்.
இதைத் தொடர்ந்து, டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விழாமல் நீண்ட நேரம் தட்டி உலக சாதனை படைக்க எண்ணியுள்ளார்.
இதற்காக, கடந்த ஒரு மாதமாக டென்னிஸ் மட்டையில் பந்தை தட்டி பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதுரையின் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதுவரை, டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டிய கின்னஸ் சாதனை நேரம் 4.08 மணி நேரமாக தான் இருந்தது.
இந்நிலையில், கவுதம நாராயணன் 4.20 மணி நேரம் டென்னிஸ் மட்டையில் பந்தை தட்டி அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழை பெறுவதற்காக இந்த வீடியோ பதிவு கின்னஸ் அமைப்பிற்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த தமிழன்....
Reviewed by Author
on
October 06, 2016
Rating:

No comments:
Post a Comment