இந்தியா ஊடாக இலங்கையை நெருங்கும் மற்றுமொரு ஆபத்து!
இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக வடக்கின் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையும் அறிவித்துள்ள போதும், மீண்டும் அந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியாவில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் சிவராமன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு யாத்திரை மற்றும் வர்த்தக நடவடிக்கைக்காக சென்று மீண்டும் நாடு திரும்புவோர் மூலம் இந்த நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கும் போதும் இந்த நாட்டிற்கு மலேரியா நோய் தொற்றுவதற்கு ஒரு காரணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டதன் பின்னர் அவ்வாறான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய வைத்தியர் இது மிகவும் ஆபத்தான நிலைமை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு மேலதிமாக பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு மலேரியா நோய் தொற்றக்கூடிய அபாயம் உள்ளது.
அந்த நோயாளிகளை இனம்கண்டு மலேரியா நோய் தொற்றும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலேரியா நோயை கட்டுப்படுத்த 640 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்ற போதிலும் உலக சுகாதார அமைப்பு இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி குறைவடைந்துள்ளதாக வைத்தியர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையினால் நோயை கட்டுப்படுத்துவதற்காக தற்போது இலங்கை பணம் செலவிடப்படுகின்றமையினால் மக்கள் மலேரியா நோய் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஊடாக இலங்கையை நெருங்கும் மற்றுமொரு ஆபத்து!
Reviewed by Author
on
October 05, 2016
Rating:

No comments:
Post a Comment