இன்றைய கேள்வி பதில் 05.10.2016
கேள்வி:−
வணக்கம் கெளரவ அட்வகேட் சார்.நான் தமிழ் நாட்டிலிருந்து வதன மோகினி.சார் இன்றைய கால கட்டத்தில் எங்கு எப்பொருள்களை வாங்கினாலும் தரமற்றதாக அமைகிறது.நாம் தரமான பணம் கொடுத்து தரமற்ற பொருட்களை வாங்குவது நியாயம்தானா?இதனை தடுக்க முடியாதா?இதற்கான பதிலினை தெளிவாக வழங்குங்கள் சார்!
பதில்:−
அன்பான சகோதரியே!இன்றைய போட்டித் தன்மை வாய்ந்த சந்தைப் பொருளாதாரத்தில் தரமற்ற(போலி) பொருட்கள் சந்தைப்படுத்தப்படுவதனை முழுமையாக ஒழிக்க முடியாதுள்ளது.போட்டித்தன்னை வாய்ந்த பொருளாதார நிறுவனங்கள் தம்மையொத்த பொருட்களின் உற்பத்தியினை தரமற்ற வகையில் உற்பத்தி செய்கின்றனர்.
இவர்களுடைய நோக்கம் இரண்டு வகைப்படும்.
1.தமது உற்பத்தியில் இலாபமீட்டுதல்.
2.பிற நிறுவனங்களை நஷ்டமடையவைத்தல்.
சீனா,பாகிஷ்தான் போன்ற அரசுகள் இந்தியாவினால் உற்பத்தி செய்யப்படுகின்ற இந்த பொருட்களின் தராதரத்தினை கெடுத்து,அதன் பொருளாதார சந்தையினை வீழ்ச்சியடையச் செய்வதற்காக இந்திய அரசின் பெயரில்(Lable)பணம்,மருந்து,அரிசு,முட்டை,பால்மா..போன்ற அத்தியாவசியமான, போலியான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.
போலியான பொருட்களின் உற்பத்தியினை நிறுத்த முடியாவிடினும் அதனை நாம் கண்டறித்து நஷ்ட ஈடு பெற முடியும். நாம் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் போது முக்கியமாக சில விடயங்களை கவனிக்க வேண்டும்.முதலில் வாங்கும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (Original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.பொருளுடன் அச்சிடப்பட்டு வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்வதுடன், குறிப்பாக மின்சார சாதனங்கள் வாங்கும் போது ISI போன்ற பொருளுக்கு சர்வதேச தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து வாங்கலாம்.அப்படி வாங்கும் பொருட்களின் விலை,தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்,முகவரி,வாடிக்கையாளர் சேவை(Custermer care Number)இருப்பதை உறுதி செய்யுங்கள். நவ நாகரீக வளர்ச்சியால் சிறிய நகரங்கள் முதல் சென்னை போன்ற பெரு நகரங்கள் வரை தொடர் சில்லரை வணிக நிறுவங்கள் (Super Market Chain Stores) செயல்படுகின்றன.அவர்கள் கண்கவரும் வகைகளில் பொருட்களை அடுக்கி வைத்திருகின்றனர்.எனவே நாம் தேர்வு செய்யும் போது பொறுமையுடன் விபரங்களை பார்வையிட அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது.வாங்கும் பொருட்களுக்கு தரப்படும் பில் மற்றும் உத்திரவாத சான்று (Guarantee Card) முதலியவற்றை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும்.
இவ்வாறு பரிசீலனை செய்த பின் வாங்கிய தரமற்ற பொருட்கள் இருப்பின்,சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்து தரும்படி கூறலாம்.பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையோ அல்லது வேறு பொருட்களோ திருப்பி வழங்கிவிடுவார்.அவ்வாறு அவர்கள் நிவர்த்தி செய்யாவிடின் முதன்மை விற்பனையாளரிடம் நேரிடையாக சென்று முறையிடலாம்.உற்பத்தி தொடர்பான குறைகள் இருந்தால் சம்மந்த்ப்பட்ட நிறுவனத்திற்கு முதலில் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம்.உற்பத்தியாளரிடம் நேரடியாக முறையிட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறு தலிப்பார்களாயின்,மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து"நுகவோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களை பொறுத்த வரை மற்ற நீதிமன்றங்களில் இருந்து மாறுபட்டு நுகர்வோர் நலன்களை காக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. எளிமையான நடைமுறைகளுடன். நீதிமன்ற கட்டணங்களும் குறைவானதாகும்.பாதிக்கப்பட்ட நபர் எளிதில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் நீதிமன்றம்,நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டும், இழப்பீட்டின் மதிப்பீட்டின் முறையிலும் நீதி மன்றங்கள் மூன்றடுக்கு (Three Tier Structure ) செயல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் ”மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ”தேசிய ஆணையம்” என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களின் மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள் செயல்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 30 மாவட்ட "குறை தீர் மன்றங்கள்"உள்ளது.
பாதிகப்பட்ட நுகர்வோர் தனது புகாரில் கோரப்படும் இழப்பீட்டின் மதிப்பு மற்றும் குறைபாடுள்ள பொருட்களின் மதிப்பு அல்லது சேவையின் மதிப்பு இருபது இலட்சத்திற்கு உட்பட்டிருந்தால் புகாரினை அதற்குரிய கட்டணத்துடன் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் (District Consumer Forum) இருபது இலட்சத்திற்கு அதிகமாகவும் ஒரு கோடிக்கு உட்பட்டும் இருந்தால் அதற்குரிய கட்டணத்துடன் மாநில நுகர்வோர் நீதி மன்றத்திலும் (State Consumer Disputes Redressal Commission) ஒரு கோடிக்கு அதிகமாக இருந்தால் அதற்குரிய கட்டணத்துடன் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்திலும் (National Consumer Disputes Redressal Commission – NCDRC) வழக்கினை பதிவு செய்ய வேண்டும்.
"பாதிக்கப்பட்டவரின் வழக்கு" சரியானதுதான்,குறிந்த நபர்(நுகர்வோர்) "குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார்"என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு(தரமற்ற பொருளினை உற்பத்தி செய்த நிறுவனம்) உத்திரவிடுகிறது.
#குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்.
#குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்.
#இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்.
#குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்.
#பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்.
#உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்.
#அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்
#தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்தமைக்கான நஷ்ட ஈட்டினை செலுத்தும்படி கோருதல்/நஷ்ட ஈடற்ற எச்சரிக்கை விடுத்தல்.
இன்றைய அசூர வேகமான வாழ்க்கையில் மனிதன் ஓய்வு(நேரம்)இன்றி அலைகின்ற சூழலில் இத்தகைய தரமற்ற பொருட்களை வாங்கிய பின் வழக்கு,நீதிமன்றம்,என்று அலைவது சாத்தியமில்லை.இதனால் தரமற்ற கம்பனிகள் தமக்கெதிரான வழக்குகளை எவரும் தாக்கல் செய்யாமையால் தமது தரமற்ற பொருட்களின் உற்பத்தியினை தாராளமாக மேற்கொண்டு சந்தைப்படுத்துகின்றனர்
இன்றைய கேள்வி பதில் 05.10.2016
Reviewed by NEWMANNAR
on
October 05, 2016
Rating:

No comments:
Post a Comment