எதிர்காலத்தில் வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்-மாணவி ஜொசிலியா
எதிர்காலத்தில் வைத்தியராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என மன்னார் மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான மன்னார்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி விமலதாசன் ஜொசிலியா தெரிவித்தார்.
தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே குறித்த மாணவி அவ்வாறு தெரிவித்தார்.
அம்மாணவி மேலும் தெரிவிக்கையில்,,,
தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 180 புள்ளிகளை பெற்று மாவட்டத்தின் முதல் இடத்தை பெற்றுள்ளேன்.முதலில் கடவுளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
-மேலும் கற்பித்து தந்த ஆசிரியர்கள்,பாடசாலை அதிபர், ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.நான் வீட்டில் சுயமாகவே கற்று வந்தேன்.பாடசாலையில் கற்பித்து தருவதை வீட்டில் படித்தேன்.தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லவில்லை.
வீட்டில் முயற்சி எடுத்து கற்றதன் காரணத்தினால் சித்தியடைந்தள்ளேன்.எனக்கு பல வகையிலும் உதவியாக இருந்த பெற்றோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எதிர்காலத்தில் ஓர் வைத்தியராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என குறித்த மாணவி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்-மாணவி ஜொசிலியா
Reviewed by NEWMANNAR
on
October 05, 2016
Rating:
No comments:
Post a Comment