அண்மைய செய்திகள்

recent
-

எதிர்காலத்தில் பொறியியலாளராக வர வேண்டும் என்பதே இலட்சியம்-மாணவன் ஹினான் அஹமட்

எதிர்காலத்தில் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்ட ரீதியில் முதல் இடத்தைப்பெற்ற இரு மாணவர்களில் ஒருவரான மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவன் ஹிஜாஸ் ஹினான் அஹமட் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே குறித்த மாணவன் அவ்வாறு தெரிவித்தார்.

அம்மாணவன் மேலும் தெரிவிக்கையில்,,,

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 180 புள்ளிகளை பெற்று மாவட்டத்தின் முதல் இடத்தை பெற்றுள்ளேன்.

இதற்கு காரணம் எனது பாடசாலையின் ஆரம்ப பிரிவு ஆசிரியரான திரு.சுபாஸ் அவர்களும்,பாடசாலை அதிபரான மாஹிர் அவர்களும் காரணம்.

மேலும் எனக்கு ஆக்கமும்,ஊக்கமும் வழங்கி பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும் குறிப்பாக எனது பெற்றோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

நான் தனியார் வகுப்புகள் எவற்றிற்கும் செல்லாது பாடசாலையில் எனது ஆசிரியர் கற்பித்து தந்த பாடங்களையும்,பாடசாலையில் மாலை நேரங்களில் நடைபெறும் வகுப்புக்களுக்கு மாத்திரமே சென்று கற்று வந்தேன்.இதன் காரணமாகவே 180 புள்ளிகளை பெற்று மாவட்டத்தின் முதல் இடத்தை பெற்றுள்ளேன்.

எனது எதிர்கால இலட்சியமாக நான் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே.என குறித்த மாணவன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பொறியியலாளராக வர வேண்டும் என்பதே இலட்சியம்-மாணவன் ஹினான் அஹமட் Reviewed by NEWMANNAR on October 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.