இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேதி அறிவிப்பு!
2016 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு தாமதமாக அக்டோபர் 13 ஆம் திகதி வெளியாகும் என்று ஸ்வீடன் அகாடமி தெரிவித்துள்ளது.
இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகளைப் பெறுபவர் யார் என்று அறிய உலக அளவில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.
இந்நிலையில், இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு தாமதமாகும் என்ற செய்தி கசிந்ததால், பரிசுக் குழுவில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி பரவக் காரணமாயிற்று.
இந்நிலையில் அகாடமி உறுப்பினர் பெர் வாஸ்ட்பெர்க், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குவது குறித்த ஸ்வீடன் அகாதெமி ஆலோசனைக் கூட்டங்கள் செப்டம்பர் 22 ஆம் திகதி தொடங்கி தொடர்ந்து நான்கு வியாழக்கிழமைகள் நடைபெறும்.
அதன் முடிவில் பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்படும். வழக்கமாக மாதத்தின் கடைசி வியாழக்கிழமைக்கு முந்தைய வியாழன் முதல் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இவ்வாண்டு செப்டம்பர் 22-ஆம் திகதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ச்சியாக நான்கு வியாழக்கிழமைகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்ற பின்னர், இறுதி ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறும்.
அதன் முடிவில் விருது பெறுபவர் பெயர் அறிவிக்கப்படும். பரிசுத் தேதி அறிவிப்பில் ஏற்படும் தாமதத்துக்கு இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்றார்.
முதல் அறிவிப்பாக மருத்துவ நோபல் பரிசு பெறுபவர் விவரங்கள் அக்டோபர் 3 ஆம் திகதி திங்கள்கிழமை அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேதி அறிவிப்பு!
Reviewed by Author
on
October 01, 2016
Rating:

No comments:
Post a Comment