மன்னார் மடுவலையத்தின் மாணவர்களுக்கு இலவசமாக….கணித பாட கருத்தரங்கு….
மன்னார் மடுவலையத்தில் உள்ள பாடசாலைகளில் இந்த வருடம்-GCE-O/L 2016 க.பொ.சாதாரண தரபப்ரீட்சை எழுதவிருக்கும் மாணவமாணவிகளுக்கான முன்னோடிக்கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களின் ஏட்பாட்டிலும் நிதிப்பங்களிப்போடும் நடை பெறவுள்ளது.
இதற்கான அனுமதியினை மடுவலையப்பணிப்பாளர் திருவாளர் T.ஜோண்குயின்ரஸ் அவர்கள் வழங்கியதோடு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.
மாணவர்களுக்கான கருத்தரங்கினை இலங்கையின் கொழும்பு பிரபலமான மும்மொழி கணிதபாட விரிவுரையாளரும் உசாத்துணை நூலாசிரியர் S.நசீர்(Nazeer) அவர்களினால் இரண்டு நாள் இலவசகருத்தரங்கானது
- மன்-அடம்பன்-மத்திய மகாவித்தியாலயத்தில் 26-10-2016 மதியம் 1-30-இரவு 8-30 வரையும்
- மன்-வட்டக்கண்டல் அ.த.க பாடசாலையில் 27-10-2016 மதியம் 1-30-இரவு 8-30 வரையும் கணிதபாடத்திற்கான இலவசக்கருத்தரங்கானது நடைபெறவுள்ளது.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்னார் மடுவலையத்தின் மாணவர்களுக்கு இலவசமாக….கணித பாட கருத்தரங்கு….
Reviewed by Author
on
October 25, 2016
Rating:

No comments:
Post a Comment