றிசாட்டுக்கு ஆதரவாக வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட டெனீஸ்வரன்
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்தும் அமைச்சர் றிசாட் கூறிய கருத்துக்கு ஆதரவாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பதில் முதலமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று (24) ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
அதன்படி வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும். எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அதற்கான வேலைகளை முதலமைச்சர் ஆரம்பிக்காது விட்டால் தாண்டிக்குளம் காணியை வழங்க வேண்டும் என தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனைவரதும் ஆதரவை எதிர்பார்கின்றதாகவும் இணைத் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பான வாய்த் தர்க்கங்களில் அமைச்சர் றிசாட், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர்.
இதில் குறுக்கிட்ட வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இத்தீர்மானம் எதற்கு? தாண்டிக்குளம் தான் எனது விருப்பம். அதை தரவில்லை. இப்போ மதவு வைத்த குளம். சரி தானே. பிறகு ஏன் குழப்புகிறீர்கள் என அமைச்சர்ட றிசாட் கூறிய கருத்துக்களுக்கு ஆதரவாக தொடர்ந்தும் தனது கருத்தை கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக முன்வைத்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடனும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் நீண்ட காலமாக இழுபறி நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
October 25, 2016
Rating:

No comments:
Post a Comment