பறிபோய் விட்டதா சிவனொளிபாத மலை? சொந்தம் கோரும் அரபு இராஜ்ஜியம்....
சிவனொளிபாத மலையின் வன பகுதியில் உள்ள சுமார் 82 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த இடத்தில் நட்சத்திர விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி ஆகிய நகரங்களுக்கு இடையிலான நில பரப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்படுகின்ற முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனமொன்றின் உரிமையாளர்களே இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக தெத்பிம் உருமய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சிவனொளிபாத மலையில் ஆதாமின் பாதங்கள் காணப்படுவதாக நம்பிக்கை ஒன்று உள்ளதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய பக்தர்களை அங்கு அழைக்கும் நோக்கிலேயே இந்த நட்சத்திர விடுதி நிர்மாணிக்கப்படுவதாகவும் குறித்த அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வனப் பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டு, சிலர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்துக்களுக்கு சொந்தமான சிவனொளிபாத மலையானது “ஸ்ரீபாத” என்ற பெயரால் சிங்கள மக்களின் வழிபாட்டுத்தளமாக காணப்படுகின்ற நிலையில் தற்போது முஸ்லிம்களும் இதில் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிவனொளிபாத மலை முஸ்லிம்களுக்கே சொந்தம்! சிங்களவர்கள் உரிமை கோர முடியாது
சிவனொளிபாத மலையானது சிங்கள மக்களுக்கு சொந்தமில்லை, இது முஸ்லிம் மக்களுக்கே சொந்தம் என்று கூறும் காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த காணொளியில்,
“சிவனொளிபாத மலை குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள தேவை இல்லை. இது முஸ்லிம்களுக்கே சொந்தம், சிவனொளி பாதம் அல்லது ஸ்ரீபாத அல்லது ஆதாமின் பாதம் என்றழைக்கப்படும் இந்த மலையின் உரிமை தொடர்பான தகவல்கள் எந்த பௌத்த மதத்தை தழுவிய புத்தகங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
13ஆம் நூற்றாண்டில் வெளியான இஃப்லூ பதூதா என்ற முஸ்லிம் மதம் சார்ந்த நூலில் இலங்கை பற்றியும், இந்த சிவனொளிபாத மலை குறிப்புகள் பற்றியும் காணப்படுகின்றது.
ஆனால், பௌத்த மதத்தை தழுவிய மஹாவச்சம், தீபவம்சம், சிங்கள போதி வங்சய, சிங்கள தூபவங்சய போன்ற எந்த நூல்களிலும் இதைப்பற்றி குறிப்பிடவில்லை. இதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம் சிவனொளிபாத மலை யாருக்கு சொந்தம் என்று” என குறித்த காணொளி காணப்படுகின்றது.

பறிபோய் விட்டதா சிவனொளிபாத மலை? சொந்தம் கோரும் அரபு இராஜ்ஜியம்....
Reviewed by Author
on
October 29, 2016
Rating:

No comments:
Post a Comment