இலங்கையில் வரட்சி. ஆறு லட்சம் பேர் பாதிப்பு.....
இலங்கையில் வரட்சியான காலநிலை நிலவும் நிலையில் ஹப்புத்தளை – பெரகல மலையின்வனப்பகுதியில தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் பரவிய இந்த தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ காரணமாக இதுவரையில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதிகள் எரிந்துநாசமாகியுள்ளன.
இந்தநிலையில் பெரகல தீயை கட்டுப்படுத்த, இராணுவத்தினரின் உதவிபெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரட்சியான காலநிலை காரணமாகபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 7 ஆயிரத்து 478 ஆக உயரடைந்துள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பொலநறுவை, அநுராதபுரம், அம்பாறை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வரட்சியால்பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 337 ஆகஅதிகரித்துள்ளது.
இலங்கையில் வரட்சி. ஆறு லட்சம் பேர் பாதிப்பு.....
Reviewed by Author
on
October 10, 2016
Rating:

No comments:
Post a Comment