அண்மைய செய்திகள்

recent
-

படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்....


அமெரிக்காவில் 16 வயது இளம்பெண் ஒருவர் படுக்கையறையில் குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தையை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Omaha நகரை சேர்ந்த Antonia Lopez (16) என்பவர் தவறான உறவால் கருவுற்றிருந்துள்ளார். இவர் கருவுற்றிருப்பது இவளது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, இவர் யாருக்கும் தெரியாமல் தனது படுக்கையறையில் வைத்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன்பின்னர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக அக்குழந்தையை வீசியுள்ளார்.

இதில் கீழே விழுந்த குழந்தையை இப்பெண்ணின் பாட்டியார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், தற்போது இப்பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தற்போது இப்பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யவிருக்கின்றனர்.



படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்.... Reviewed by Author on October 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.