அண்மைய செய்திகள்

recent
-

மக்களே அவதானம்….!!! வியாபாரிகள் கவலை……


மக்களாகிய நாம் இன்னும் எது நல்லது எது கெட்டது என்பதை முழுமையாக அறியாதவர்களாகவே உள்ளோம். என்பது சொல்வது தவறு என்று நினைக்கின்றேன். காரணம் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நவீன உலகம் அதனால் தெரியாது என்பதை விட தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் பொருந்தம் என நினைக்கின்றேன்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் இரசாயணங்கள் கிருமிநாசினிகள் கலந்துள்ளது அதைநாம் தெரரிந்தும் தெரியாமலும் பயன்படுத்துகின்றோம். பழகியும் விட்டோம் ஆபத்தினை உணர்ந்து விடுவாதாகவும் இல்லை விடப்போவதும் இல்லை….

எப்படி புகைத்தல் புற்று நோயை உண்டு பண்டும் என்ற வாசகத்தோடு வெளிவரும் புகைத்தல் பொருட்களையும் குடி உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தோடு வரும் குடிபாணங்களையும் உற்பத்தி செய்து விநியோகிகக்கும் அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் அதே நிறுவனங்கள் தான் போராடுகின்றது எதிர்க்கின்றது வெளிப்பபூச்சிற்கு ஆனால் உள்ளாக உற்சாகப்படுத்துகின்றார்கள் உற்பத்திகள் தொடர்கின்றது. போத்தல் கள்ளு கசிப்பு கஞ்சாப்பாவனை விதமான போதைப்பாக்குகள் அழகு சாதனப்பொருட்கள் ஊசிமருந்துகள் வலிநிவாரணிகள் இன்னும் ஏராளம் இவை உணவுப்பொருட்களோடு சேராது என்றாலும் இவைகளும் மக்களின் உயிர்களைப்பறிக்கும் கொடியவைகளே….

நாம் அன்றாடம் எமது உணவாக உட்கொள்கின்ற பல உணவுப்பொருட்கள் நஞ்சுதான் என்பது நமக்கு தெரியாது ஏன் என்றால் வர்ணமிடப்பட்டுள்ளது சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது கவர்ச்சிகரமான பொதியிடப்படுகின்றது. இயற்கையாக இருந்தவற்றை எல்லாம் செயற்கையாக மாற்றிவிட்டு நாமும் செயற்கையாக மாறிக்கொண்டிருக்கின்றோம் எங்கள் பயணப்பாதை கல்லறை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.

நாம் உண்ணும் உணவுகளில்……
  • புரெய்லர் கோழி
  • பழங்களில்
  • துரித உணவுகளில்
  • நாம் குடிக்கும் குளிர்பாணங்களில்(சோடாக்கள்-ஐஸ்கிறீம்வகைகள்)
  • மரக்கறிகள் போறைகள் என்ற பெயரிலும் எல்லவற்றிலும் இரசாயணம் தான் கலக்கின்றார்கள். நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் இவைகள் நஞ்சு நச்சு விசம்  உள்ளவைகளாக  சயனைட்-டொமாடின் லெக்டீன் SODIUM ERYTHORBATE-SODIUM NITRATE கெபேன் நிக்கோட்டின் இன்னும் ஏராளம் உள்ளது இவற்றோடு சத்து நிறைந்த புரதம் விட்டமின்கள் நார்ச்சத்துக்கள் கனிமங்கள் நியாசின் துத்தநாகம் அதிகளவில் உண்பதாலும் கதிர்வீச்சுக்கள் அதிகரிப்பாலும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தீங்காக அமைகின்றது.
  •  குளிர்சாதனப் பெட்டி(பிரிட்ஜ்) வைத்து விட்டு, மீண்டும்  பயன்படுத்துவதால் பக்ரீயா பங்கஸ் வைரஸ்  தொற்று நோய்கள் பரவுகின்றன மெல்லக்கொள்ளும் நஞ்சு நமக்கு தெரியாமலே நம்மை ஆட்கொண்டு கடைசியில் இளம் வயதிலே புதுவகையான நோய்களால் பாதிக்கப்பட்டு கல்லறையில் துயில வேண்டியததான.
இங்கே நான் உங்களுக்கு தெரியாத விடையத்தினை செல்லவில்லை தெரிந்தததைத்தான் நினைவுபடுத்தியுள்ளேன்.
நவீனம் என்ற பெயரிலும் புதுமை என்ற பெயரிலும் நாங்களே எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றோம்.

சமீபத்தில் ஒரு கடைமுதளாலி என்னிடம் சொன்னார் தம்பி இங்க பாரும் இந்த சோடாக்கள் இப்படி வெடித்துள்ளது இதை கொம்பனிக்காரனிடம் கேட்கவும் அவர்கள் மாற்றித்தருகின்றார்கள் இல்லை ஏமாற்றுகின்றார்கள் இப்படி வெடிக்க காரணம் என்னவாக இருக்கும்  என்று கேட்டேன்.

 என்ன தம்பி அதிகமான காஸ்தான் அதுதான் வெடிக்கின்றது. இதைத்தானே அண்ணே குடிக்கிறம் இதுகளின்ர தாக்கம் எமது உடலில் எப்படி இருக்கும் என்று கேட்டேன் தம்பி..... சும்மா போங்க இதுவரைக்கும் 15ந்து 2லீற்றர் போத்தல் வெடித்துள்ளது எவ்வளவு நட்டம் நான் மட்டுமா....... இன்னும் எத்தனை கடைக்காரங்கள் புலம்புகின்றார்கள் முடிவு கிடைக்காமல்….
அவசர உலகில் ஆடம்பரத்திற்கும் பணத்திற்கும் தான் முதலிடம்
ஆரோக்கியம் எல்லாம் வெறும் பேச்சளவிலும் பேரணியளவிலும் தான்
உணராமல் இருக்கும் மட்டும் உயிர்கள் பலியாகிக்கொண்டு தானிருக்கும் உள்ளவரை………………………………………………..


என்ன இருக்கிறது எந்த  உணவில் என்பதும் தெரியாது
என்ன கலக்கிறார்கள் என்பதும் தெரியாது
எதை உண்பது என்பதும் புரிவதில்லை-காண்பது எல்லாம்
நல்லதாய் தெரியுது கவரும் தன்மை கண்ணை மறைக்குது......

காசு கொடுத்து மரணத்தை வாங்குகிறோம்
கடமை என்று கண்ணை  திறந்து தூங்குகிறோம்
காலம் நில்லாது காற்று போல
கைமீறி போனதும் கலங்கி ஏங்குகின்றோம்.

 -வை.கஜேந்திரன்- 
 மீண்டும் வருவேன்





மக்களே அவதானம்….!!! வியாபாரிகள் கவலை…… Reviewed by Author on October 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.