10 அடி கேக்...ரூ.9 கோடிக்கு தங்க உடை: ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த மணப்பெண்....
ரஷ்யாவில் பிரபல எண்ணெய் தொழிலதிபரின் மகள் தொடர்பான திருமணவரவேற்பு நிகழ்ச்சி வீடியோ தான் தற்போது அந்நாட்டில் உள்ள இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள மாஸ்கோ நகரில் பிரபல எண்ணெய் நிறுவன தொழிலதிபரான Madina Shokirova வின் மகள் Ilkhom Shokirova விற்கு கடந்த வாரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு 9000 க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது திருமண தம்பதிகளாக வந்த மணப்பெண் மற்றும் மணமகனை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அதற்கு காரணம் மணப்பெண் அணிந்திருந்த ஆடை வியக்க வைக்கு அளவிற்கு இருந்துள்ளது. தங்க இழை பதித்த இந்த ஆடையை பிரித்தானிய ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 517,200 பவுண்ட் வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து திருமண தம்பதிகளுக்கு 10 அடி உயரமுள்ள ராட்சத கேக்கை வெட்டுமாறு பரிசளித்தனர். அதன் பின்னர் ஆடல் பாடல் என திருமண வரவேற்பு நிகழ்ச்சியே களைகட்டியது.
ஆனால் இது ஒன்றும் ரஷ்யாவின் அதிக அளவு பொருட்செலவில் செய்யப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக கூறமுடியாது என்றும் இதை விட அதிகமாக பொருட்செலவில் திருமணவரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
10 அடி கேக்...ரூ.9 கோடிக்கு தங்க உடை: ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த மணப்பெண்....
Reviewed by Author
on
November 02, 2016
Rating:

No comments:
Post a Comment