இலங்கை வரலாற்றில் 151 ரூபாவை கடந்த டொலர்....
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா டொலரின் பெறுமதி நேற்றைய தினம் 151 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 151.07 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் பெறுமதி 150.59 ரூபாவாக காணப்பட்டது.
இதனால் தொடர்ந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றமையினால் இலங்கைக்கு கொண்டு வரும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை விலைகள் உயர்வடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் 151 ரூபாவை கடந்த டொலர்....
Reviewed by Author
on
November 30, 2016
Rating:

No comments:
Post a Comment