மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல காணிக்கு உரிமை கோரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் - மாவீரர்நினைவேந்தலை தடுக்கவும் முற்பட்டனர்
மன்னார் ஆண்டான்குளம் ஆட்காட்டிவெளியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடைபெறவிடாது தடுப்பதிலும் மக்கள் பிரதிநிதிகளை பங்கெடுக்கவிடாமல் தடுத்தமையிலும் மதத்துறவிகள் சிலர் முன்னின்று செயற்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல காணி தமக்கு சொந்தமானதென தெரிவித்து அப்பகுதி பங்கு தந்தை டெஸ்மன் மற்றும் குருமுதல்வர் விக்டர் சோசை ஆகியோர் காவல்துறைக்கு முறைப்பாடு செய்தததுடன் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் சக கத்தோலிக்க துறவிகளிடையே கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. அத்துடன் அவர்கள் மாவீரர் நாள் தடை தொடர்பாகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் ஆயர் இல்லத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் மன்னார் ஆயர் இல்லம் கடந்த காலங்களில் ஆற்றிய பங்கு சொல்லில் வடிக்க முடியாததொன்று. எனினும் தற்போது மாவீரர் தின நினைவேந்தலை அதே பங்கினை சேர்ந்த சிலர் தடுத்தமை பற்றி ஆயர் இல்லம் அறிந்திருக்கவில்லையாவெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மன்னார் ஆயரில்லத்துடன் கலந்துரையாடி சுமூகமாக முடிக்கப்பட்டதாக மன்னார் ஏற்பாட்டாளர்கள் மன்னார் இணையத்துக்கு தெரிவித்துள்ளனர்
தொடர்புடைய செய்திகள்
மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல காணிக்கு உரிமை கோரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் - மாவீரர்நினைவேந்தலை தடுக்கவும் முற்பட்டனர்
Reviewed by NEWMANNAR
on
November 30, 2016
Rating:

No comments:
Post a Comment