அண்மைய செய்திகள்

recent
-

2030ல் உலகை ஆளப்போகும் முதல் 10 நாடுகள் இவை தான்! வெளியான சுவாரசிய தகவல்கள்....


2030ம் ஆண்டில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் பத்து நாடுகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விவசாயத் துறை நடத்திய ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்கா

2030ம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி $23,857 பில்லியன் டொலராக இருக்கும் என கூறப்படுகிறது. இது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.3 சதவிகிதம் அதிகமாகும்.

சீனா

இதற்கு அடுத்தபடியாக $18,829 பில்லியன் டொலருடன் இரண்டாம் இடத்தில் சீனா இருக்கும். இது 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவிகிதம் அதிகமாகும்.

இந்தியா

இந்தியா பொருளாரத்தில் அபார வளர்ச்சி இருக்கும் என்றும், 2016ல் $2,557 பில்லியன் டொலராக இருக்கும் வருமானம் 2030ல் $7,287 பில்லியன் டொலராக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பான் வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 2030ல் $6,535 பில்லியன் டொலராக இருக்கும் என கருதப்படுகிறது.

ஜேர்மனி

ஜேர்மனியின் வளர்ச்சி 0.9 சதவிகிதம் வளர்ச்சி பெற்று 2030ல் $4,308 இருக்கும் என சொல்லப்படுகிறது.

பிரித்தானியா

பிரித்தானியாவை பொறுத்த வரையில் 2.5 சதவிகிதம் அதிகரித்து $3,815 பில்லியன் டொலராக இருக்கும், தற்போதைய நிலவரப்படி 2016ம் ஆண்டில் $2,710 பில்லியன் டொலராக உள்ளது.

பிரான்ஸ்

2016ம் ஆண்டில் $2,809 பில்லியன் டொலராக இருக்கும் வருமானம், 1.5 சதவிகிதம் அதிகரித்து $3,476 பில்லியன் டொலராக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பிரேசில்

2.5 சதவிகிதம் அதிகரித்து பிரேசிலின் பொருளாதாரம் $3,161 பில்லியன் டொலராக இருக்கும்.

கனடா

தற்போது $1,829 பில்லியன் டொலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ள கனடா, 2030 இல் 2,486 பில்லியன் டொலர்களுடன் 2.1 சதவிகிதம் அதிகரித்திருக்கும்.

இத்தாலி

2030ம் ஆண்டில் 0.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்த $2,350 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.


2030ல் உலகை ஆளப்போகும் முதல் 10 நாடுகள் இவை தான்! வெளியான சுவாரசிய தகவல்கள்.... Reviewed by Author on November 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.