அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தில் 4ஆம், 5ஆம் குழந்தைகளிற்கு பரிசு-சிவசேனை அறிவிப்பு!










வடக்கு ,  கிழக்கில் 4 ஆவது, 5 ஆவது குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைகளின் பராமரிப்புக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு சிவசேனை அமைப்பு தீர்மானித்துள்ளது.

வீழ்ச்சியடைந்து வருகின்ற சைவத்தமிழரின் இன விகிதாசாரத்தையும் சிவபூமியின் பூர்வீக கிராமங்களில் இருப்பையும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக்கொண்டு இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

சிவசேனையின் இணைத் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் 75 ஆவது அகவையை முன்னிட்டு சிவசேனை அமைப்பு சைவ அறப்பணி நிதியத்தினூடாக இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவிருக்கின்றது.

4 ஆவது, 5 ஆவது குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் அவர்கள் இந்த உதவியைப் பெறமுடியும். அதிலும் அந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உதவி தேவைப்படுவோர் அல்லது பொருளாதாரத்தில் பின்னடைந்தோர் இந்த உதவியைப் பெற முடியும்.

கார்த்திகை மாதம் இறுதியில், சச்சிதானந்தனின் பிறந்த நட்சத்திரம் அன்று முதற்கட்டமாக 75 மழலைகளின் பெயரில் பணம் வைப்பிலிடப்படவிருகின்றது. 2016 ஆம் ஆண்டு 4 ஆவது, 5 ஆவது குழந்தையாகப் பெற்றெடுத்த, உதவி தேவைப்படுவோர் இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கஷ்ட நிலைக்கு மத்தியிலும் குழந்தைகளைப் பெற்றெடுத்து தமிழிலில் பெயர் சூட்டப்பட்டிருக்கும் குழந்தைகளைத் தேர்வு செய்வதற்கான பணியில் சிவசேனையின் மாவட்ட இணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சைவத் தமிழ் அன்பர்களின் நிதியுதவிகளைப் பெற்றே சிவசேனை இந்தச் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவிருக்கின்றது.

எனவே, இந்தப் பணி தொடர்வதற்கு அனைவரையும் ஆதரவுக்கரம் நீட்டுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த தொடர் பணியிலும் பெண் தலைமைத்துவ மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பணிகளிலும் ஈடுபட விரும்புபவர்கள் ஆகக்குறைந்தது 200 ரூபாவை மாதாந்தம் வைப்பிலிட முன்வருமாறும் சைவத் தமிழ் உறவுகளிடம் சிவசேனை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக விபரங்களை சிவசேனையின் இணைப்பாளர்கள்
 சிவத்திரு கோடிசுவரன் 0779994424, 
காண்டீபன் 0770870414 
ஆகியோரிடம் பெற்றுக்கொள்ளலாமெனவும் இந்த சைவ அறப்பணி நிதியத்தின் மாதாந்த நிதிக்கூற்று தங்களுக்கு அறியத்தரப்படும் என்றும் சிவசேனை அறிவித்துள்ளது
ஈழத்தில் 4ஆம், 5ஆம் குழந்தைகளிற்கு பரிசு-சிவசேனை அறிவிப்பு! Reviewed by NEWMANNAR on November 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.