அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விலைமாதுகள்! - நாடாளுமன்றில் மஹிந்த அணி..


இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான ஸ்ரீயாணி விஜேவிக்கிரம சபையில் தகவல் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(28) நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இரண்டு வருடமாகியும் இன்னும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.

பெண்களுக்கு இன்று சுதந்திரமாக பொதுபோக்குவரத்தில் பயணிக்கமுடியவில்லை. பல்வேறு வன்முறைகளை சந்திக்கவேண்டிய அவலநிலை இருக்கின்றது. எனவே, இவ்வாறான

சம்பவங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் கம்பீரமாகச் செயற்பட வேண்டும். அதற்காக விசேட திட்டங்களும் அவசியம்.

போரால் விதவையான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அவசியம். அதற்காக விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதேவேளை, இன்று எச்.ஐ.வி. தொற்றுநோய் அதிகரித்து வருகின்றது. இதற்கு பிரதான காரணமாக பாலியல் தொழில் காணப்படுகின்றது. அந்தத் தொழிலில் சுமார் 15 ஆயிரம் வரையிலான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது.

ஆனால், அரசசார்பற்ற அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.

இந்த அரசு பல வழிகளிலும் வரி விதிக்கின்றது. வாழ்க்கை பெரும் சுமையாக இருக்கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் மேற்படி தொகை இரட்டிப்பாகினாலும் வியப்பில்லை" என் அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விலைமாதுகள்! - நாடாளுமன்றில் மஹிந்த அணி.. Reviewed by Author on November 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.