அண்மைய செய்திகள்

recent
-

சித்திரவதைக்குள்ளான பிரித்தானிய பிரஜை - இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் பிரித்தானியா...!


இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

பிரத்தானியாவில் அரசியல் தஞ்சமடைந்த ரேனுகாரூபன் வேலாயுதபிள்ளை திருமணம் செய்துக் கொள்வதற்காக இந்தாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு சென்றார்.

இதன்போது பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து அவரை அழைத்து சென்றுள்ளதுடன், அவரை தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு ரெட்ரெஸ் (REDRESS) என்ற அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மனித உரிமைகள் வழக்கறிஞர் குலசேகரம் கீதரத்னம் தெரிவித்துள்ளார்.

நபர்களை கடத்தி சென்று சித்திரவதை மேற்கொண்டமை இந்தாண்டிலும் இடம்பெற்றதாக புதிதாக மேலும் சாட்சிகள் கிடைத்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இருந்து ஒரு மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள அனைத்து சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு, இலங்கை தொடர்பில் மேற்கொண்ட விசேட ஆய்வின் போதே இந்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஐக்கிய ராஜ்ஜியத்தின் குடிமகனான சித்திரவதைக்குள்ளான ரேனுகாரூபன் இலங்கையில் துன்புறுத்தல்களுக்குள்ளான சந்தர்ப்பத்தில் அவரது பாதுகாப்பிற்காக தலையிடாத குற்றச்சாட்டிற்காக பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு எதிராகவும் வழக்கு தொடரவுள்ளதாக வழக்கறிஞர் கீரத்னம் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பட்டாளர்களின் தலையீட்டின் பின்னர் விடுதலையாகி லண்டன் நோக்கி சென்ற ரேனுகாரூபனை பரிசோதித்த விசேட வைத்தியர்கள், அவரது மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்தமையினால் தனது சகோதரனின் தலை, முகம், வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது தங்கை லலிதாரூபி வேலாயுதபிள்ளை, இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

ஜுலை மாதத்தின் ஆரம்பத்தில் பிரித்தானியா நோக்கி சென்ற தனது சகோதரர் உடனடியாக சிகிச்சை பெறுவதற்காக அரசாங்க வைத்தியசாலைக்கு சென்ற ரேனுகாரூபன் தொடர்பில் வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில், கைது செய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளான அவருக்கு வெட்டுகாயங்கள் மற்றும் இரத்தம் கட்டி தழும்புகள் பல காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு யுத்தத்தில் தங்கள் ஊரான பலாலியை கைவிட்டு 1990ஆம் ஆண்டு வரணி பிரதேசத்தில் குடியேறும் நிலைமை லோயுதம்பிள்ளைக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதலை புலி உறுப்பினராக சந்தேகிக்கப்பட்ட ரேனுகாரூபன் அரசாங்க பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் 2000ஆம் ஆண்டு நாட்டை விட்டு சென்றுள்ளார்.

அரசியல் பாதுகாப்பு பெற்றுக் கொண்டதன் பின்னர் 2013ஆம் ஆண்டு அவர் பிரித்தானியா குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவரது சகோதரர் லலிதரூபி பாதுகாப்பு பிரிவினால் இரண்டு முறை கைது செய்யப்பட்டதன் பின்னரே பிரித்தானியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.

அவர் கூறுவதற்கமைய ஜுன் மாதம் 2ஆம் திகதி மாலை கொடிகாமம் பொலிஸாரே அவர்களின் வீட்டிற்கு நுழைந்து அவரது சகோதரரை கைது செய்துள்ளனர்.

அவரது கடத்தி செல்லப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ஆலோசகரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் யாழ்ப்பான இராணுவ மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உட்பட அரசாங்க அதிகாரிகளிடம் சர்வதேச மனித உரிமை அமைப்பாளர்கள் வினவியுள்ளனர்.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சிற்கும், சர்வதேச மன்னிப்பு சபைக்கும் கடத்தப்பட்டமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரேனுகாரூபன் கைது செய்யப்பட்டதை ஒஸ்டின் பெர்ணான்டோவினால் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்தாக லலித்ரூயின் வழக்கறிஞர் மெலனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சித்திரவதைக்குட்பட்டு கடுமையான காயமடைந்த ரேனுகாரூபன் வேலாயுதபிள்ளை கடந்த ஜுன் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஜுன் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரேனுகாரூபன் வேலாயுதபிள்ளைக்காக வழக்கறிஞர் என்டனி புனிதநாயக ஆஜராகியதன் பின்னர் அவர் விடுதலையாகி ஜுலை மாதம் 7ஆம் திகதி பிரித்தானியா நோக்கி சென்றுள்ளார்.

அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இந்த அரசாங்கத்தின் கீழ் சித்திரவதையில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகளுக்கு முழுமையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சித்திரவதைக்குள்ளான பிரித்தானிய பிரஜை - இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் பிரித்தானியா...! Reviewed by NEWMANNAR on November 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.