வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முறுகல்
2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தினால் அரச சுகாதார துறைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக நாடு முழுதும் உள்ள அரச வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதன்படி வவுனியா பொது வைத்தியசாலையிலும் இன்று காலை 8.30 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த வேலை நிறுத்தத்தை படம் பிடிக்கவும் செய்திகள் சேகரிக்கவும் சென்ற ஊடகவியலாளர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புகைப்படக்கருவியுடன் உட்செல்ல அனுமதிக்கவில்லை எனவும், ஊடகவியலாளர்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து சுகாதார அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கையிட உள்ளதாக வவுனியா மாவட்ட ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முறுகல்
Reviewed by NEWMANNAR
on
November 30, 2016
Rating:

No comments:
Post a Comment