ஊடக சுதந்திர நிலையில் இலங்கை முன்னேற்றம்!
ஊடக சுதந்திர நிலையில் இலங்கை சாதகத்தன்மையை பதிவு செய்துள்ளது.உலக ஊடக சுதந்திரம் தொடர்பிலான ஆய்வின் ஒன்றில் இவ்வாறு சாதக நிலைமை பதிவாகியுள்ளது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் போது இலங்கையின் தற்போதைய ஊடக சுதந்திர நிலைமை முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
180 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கை 141ம் இடத்தை வகிக்கின்றது.2002ம் ஆண்டு முதல் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், ஊடகவியலாளர்கள் குறித்த சட்டங்களின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்த ஆய்வின் அடிப்படையில் இலங்கை 165ம் இடத்தை வகித்ததுடன், தற்போது 141ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன்படி இலங்கை 24 இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த காலங்களில் பாகிஸ்தான், மலேசியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளை விடவும் பின்தங்கியிருந்த இலங்கை தற்போது அந்த நாடுகளை விடவும் முன்னேறியுள்ளது.
ஊடக சுதந்திர நிலையில் இலங்கை முன்னேற்றம் ஊடக சுதந்திர நிலையில் இலங்கை சாதகத்தன்மையை பதிவு செய்துள்ளது.உலக ஊடக சுதந்திரம் தொடர்பிலான ஆய்வின் ஒன்றில் இவ்வாறு சாதக நிலைமை பதிவாகியுள்ளது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் போது இலங்கையின் தற்போதைய ஊடக சுதந்திர நிலைமை முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
180 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கை 141ம் இடத்தை வகிக்கின்றது.2002ம் ஆண்டு முதல் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், ஊடகவியலாளர்கள் குறித்த சட்டங்களின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்த ஆய்வின் அடிப்படையில் இலங்கை 165ம் இடத்தை வகித்ததுடன், தற்போது 141ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன்படி இலங்கை 24 இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த காலங்களில் பாகிஸ்தான், மலேசியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளை விடவும் பின்தங்கியிருந்த இலங்கை தற்போது அந்த நாடுகளை விடவும் முன்னேறியுள்ளது.
ஊடக சுதந்திர நிலையில் இலங்கை முன்னேற்றம்!
Reviewed by Author
on
November 28, 2016
Rating:
Reviewed by Author
on
November 28, 2016
Rating:

No comments:
Post a Comment