முல்லைத்தீவு காட்டுக்குள் பதுங்கியுள்ள மர்மநபர்கள்! சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு,,,,
முல்லைத்தீவு காட்டுக்குள் ஆவா குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பதுக்கியுள்ளதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை சேர்ந்த ஏனைய மூவரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களுக்கு முன்னர் யாழில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் ஆவா குழுவின் 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழில் சில நபர்களுக்கு இடையில் இடம்பெறுகின்ற சீட்டு பிரச்சினை, காணி பிரச்சனை போன்ற தனிப்பட்ட மோதல்களுக்காக ஆவா குழுவின் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு அரசியல் குழுவொன்று தயாராகிறது.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாள் மற்றும் இரண்டு பக்கங்களிலும் வெட்டு கத்தியை அருகில் வைத்துக் கொள்பவர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவு மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு காட்டுக்குள் பதுங்கியுள்ள மர்மநபர்கள்! சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு,,,,
Reviewed by Author
on
November 05, 2016
Rating:

No comments:
Post a Comment