அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபை பாரபட்சமின்றி தமது பணிகளை செய்கின்றது - காதர் மஸ்தான் -Photos

வடமாகாண சபை தமது பணிகளை தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பாகுபாடின்றி செய்து வருகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான, கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நேற்று (04.11.2016)வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா முஸ்லிம் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் தமிழர்களது நிகழ்வுகளுக்கு முஸ்லிம்கள்அழைக்கப்படுவதுமில்லை முஸ்லிம்களது நிகழ்வுகளில் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதுமில்லை, ஆனால் இப்பொழுது அவ்வாறான நிலை எமது வன்னி மாவட்டத்தில் இல்லை என்பதை நாம் ஏனையவர்களுக்கு புரியவைத்திருக்கிறோம்.

இங்கு சிலர் இனவாதத்துடன் அரசியல் செய்ய நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் தமிழ்,சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாட்டை களைந்து இதய சுட்டியுடன் செயற்படுகின்றோம் என்பதற்கு இந்த நிகழ்வும் ஓர் உதாரணமாகும்.

மேலும் பொதுமக்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும் கடமையும் சேவையும் ஒன்றல்ல, அரசியலுக்கு வரும் முன்னர் சமூகத்திற்கும் மக்களுக்கும் நல்ல காரியங்கள் ஏதேனும் செய்திருந்தால் அது சேவை, அரசியலுக்குள் வந்துவிட்டால் ஏதேனும் உங்களுக்காக செய்தால் அது கடமையே தவிர சேவையல்ல,
இவ்வாறான உங்களது சமூக தேவைகளுக்காக அரசியல்வாதிககளை தட்டிக்கேற்க்கும் முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது ஏனெனினில் அதுவும் உங்களது கடமைதான் என அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நன்னோக்குடன்ச மூகத்திற்கான சேவைகளில் ஈடுபடுபவர்கள் பாராட்டி கோரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மட்டத்திலான முஸ்லிம் கலாசார போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட வடமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் கலைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு









வடமாகாண சபை பாரபட்சமின்றி தமது பணிகளை செய்கின்றது - காதர் மஸ்தான் -Photos Reviewed by NEWMANNAR on November 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.