முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுகின்றது - செல்வம் அடைக்கலநாதன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்கள் பல வழிகளில் சுரண்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
'அனைவருக்கும் நிழல்' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று(5) முல்லைத்தீவு பிரதேச சபை மைதனத்தில் நடை பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே செல்வம் அடைக்களநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து கொண்டிருக்கும் முல்லை மாவட்டம் பலவழிகளில் சுரண்டப்படுவதுடன் அவர்களின் நிலங்களும் அபகரிக்கப்படுகின்றது. பல ஏக்கர் நிலங்களை பாதுகாப்புதுரையினர் எடுத்துக் கொள்ளும் நிலையே காணப்படுகின்றது
யுத்தம் முடிந்து பல வருடங்கள் கடந்தும் எமது மக்கள் இன்னமும் தற்காலிக வீடுகளில் வசிக்கும் நிலை காணப்படுகின்றது என்று கூறியுள்ளார்.
இந்த திட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் 'அனைவருக்கும் நிழல்' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 16000 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் இன்றி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், மக்களின் வீட்டுப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து மிகவும் கவலையடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் உலக வீடமைப்பு திட்டத்திற்கு 30 வருடங்கள் பூத்தியடைகின்றன. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 புதிய கிராமத் திட்டத்தினை ஆரம்பித்து, அதன் ஊடாக வீடற்றவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற விடயத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுகின்றது - செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
November 06, 2016
Rating:

No comments:
Post a Comment