சூரியனை தாக்கிய மர்ம கிரகம்! ஏலியன்ஸா? நாசா செயற்கைக்கோள் எடுத்த அதிர்ச்சி புகைப்படம்...
நாசாவின் ஸ்டீரியோ செயற்கைக்கோள் ஒன்று எடுத்த விசித்திர புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரியனை சுற்றி வரும் ஸ்டீரியோ செயற்கைக்கோளே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது.
நீல நிறத்தில் உருண்டை வடிவத்தில் உள்ள அந்த பொருள், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் என கூறப்படுகிறது.
மேலும் அது மறைவதற்கு முன் சூரியனில் எதிர்வினை ஏற்படுத்தியதாகவும், இது ஏலியன்ஸின் செயல் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சிலர் இதுபோன்ற முக்கிய விடயம் பொதுமக்களை அடையும் அளவிற்கு நாசா கவனக்குறைவாக இருக்காது என கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுகுறித்து நாசா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால் மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
சூரியனை தாக்கிய மர்ம கிரகம்! ஏலியன்ஸா? நாசா செயற்கைக்கோள் எடுத்த அதிர்ச்சி புகைப்படம்...
Reviewed by Author
on
November 21, 2016
Rating:

No comments:
Post a Comment