அண்மைய செய்திகள்

recent
-

பெண்ணுடன் ரகசிய அறையில் பதுங்கியிருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது-Photo


திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க தாடியுடன் வந்த வேந்தர் மூவீஸ் மதனை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை திருப்பூரிலிருந்து சென்னைக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.

'வேந்தர் மூவிஸ்' மதன், காசிக்கு சென்று கங்கையில் சமாதியடைகிறேன் என்று கடந்த மே மாதம் 27-ம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார். மேலும், அந்தக் கடிதத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் குறித்து சில தகவல்களையும் குறிப்பிட்டு இருந்தார். மதனை கண்டுபிடித்து தரும்படி அவரது தாயார் தங்கம், விருகம்பாக்கம் போலீஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்து எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் கொடுத்த 200 கோடி ரூபாய் மோசடி புகாரிலும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதனின் தாயார் தங்கம் சார்பில் வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதன்படி, மதன் தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.



மருத்துவ சேர்க்கைக்கு பணம் வாங்கி மதன், மோசடி செய்ததாக கடந்த 1.6.16ல் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயசந்திரன், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இவ்வாறு மதன் மீதும், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை கொடுத்தனர்.


மதன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது போலீஸ் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. பல முறை காலஅவகாசம் கேட்டு பெற்ற போலீஸாரை ஒரு கட்டத்துக்கு மேல் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. இந்த சமயத்தில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை போலீஸார் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.


இந்நிலையில் 6 மாதங்களாக தேடப்பட்ட வந்த மதனை போலீஸார் இன்று திருப்பூரில் கைது செய்துள்ளனர்.


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மதன், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் மீது புகார்கள் வந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தி மதனுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக ஐ.ஜே.கே கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பார்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்ட தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பாபு மற்றும் புரோக்கர் விஜய்பாண்டி, மதன் அலுவலகத்தில் மேலாளராக இருந்த சுதீர், அக்கவுன்டன்ட் குணா, மற்றும் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதனை கண்டுபிடிக்க வாரணாசி, ரிஷிகேஷ், ஹரிதுவார், திருவனந்தபுரம், கொச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். மதன் குறித்த விவரங்களை ரகசியமாக சேகரித்தோம். உத்தரகாண்ட் மாநிலத்தில் மதன், சொத்துகளை வாங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் மதனுடன் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் போனில் பேசிவருவதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது. அந்த பெண் மூலம் மதனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டோம். மேலும் அந்த பெண்ணின் உறவினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மதன், சொத்துகள் வாங்க உதவி செய்தவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அப்போது மதனின் கூட்டாளிகள் மணிப்பூர் மாநிலம், இம்பாலில் தங்கியிருந்த தகவல் கிடைத்தது. அப்போது மதனின் கூட்டாளிகளின் செலவுக்கு பணம் அனுப்பிய விவரங்களை சேகரித்தோம். இந்த நிலையில் மணிப்பூரில் தங்கியிருந்த கூட்டாளிகளை, மதன் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து விட்டுச் சென்றதாகவும் எங்களுக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. மணிப்பூரிலிருந்து தமிழகத்துக்கு வந்த மதன், திருப்பூரில் நேற்று இரவு ஒரு பெண்ணை சந்திக்க வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு தனிப்படையினர் முகாமிட்டனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு மதன் வந்தபோது அவரை நாங்கள் கைது செய்தோம். திருப்பூரிலிருந்து சென்னைக்கு அவரை அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்" என்றார்.

தாடியுடன் மதன்

வழக்கமாக ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவது மதனின் வழக்கம். இதனால் இந்த ஆண்டு அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு வருவார் என்றும் தனிப்படை போலீஸார் கருதினர். இதனால் சபரிமலைக்கு மதன் வந்தால் அங்கு அவரை கைது செய்யவும் தனிப்படை போலீஸார் முடிவு செய்திருந்தனர். இந்த சமயத்தில் திருப்பூருக்கு மதன், ஒரு பெண்ணை சந்திக்க வரும் தகவல் கிடைத்ததும் போலீஸ் யூனிபார்ம் அல்லாத சில போலீஸ் அதிகாரிகள் திருப்பூர் அவினாசி ரோட்டில் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக தாடியுடன் வந்த மதனை மடக்கிப்பிடித்தோம். மதனை பிடிக்க எங்களுக்கு உதவிய பெண்ணின் விவரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று போலீஸ் உயரதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். மதனுக்கு உதவியது அவரது மனைவியின் சொந்தக்காரப் பெண் என்று மட்டும் போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.


மதனின் தாயார் தங்கத்தின் வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷிடம் பேசினோம். மதனை போலீஸார் கைது செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது தாயார் தங்கம் மற்றும் மனைவியிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.

மதன் கைது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பேட்டி அளித்த போது, 'திருப்பூரில் மதனை கைது செய்துள்ளோம். ஒரு பெண்ணை சந்திக்க அவர் வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. விசாரணை நடந்து வருகிறது' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
பெண்ணுடன் ரகசிய அறையில் பதுங்கியிருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது-Photo Reviewed by NEWMANNAR on November 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.