அண்மைய செய்திகள்

recent
-

ஜேம்ஸ் றீற்றம்மா சுதாஜினி உதவிக்கரம் உதயமாகி ஒருவருட நிறைவு விழாவும் ,அமரர் ஜேம்ஸ் .சுதாஜினி இசைக்குரல் தேர்வு- பரிசளிப்பு நிகழ்வு- 2016



ஜேம்ஸ் றீற்றம்மா சுதாஜினி உதவிக்கரம் உதயமாகி ஒருவருட நிறைவு விழாவும் ,அமரர் ஜேம்ஸ் .சுதாஜினி இசைக்குரல் தேர்வு-2016 இற்குரிய பரிசளிப்பு நிகழ்வுகளும் ஜேம்ஸ் சுதாஜினியின் பிறந்த நாளான 04-11-2016 வெள்ளிகிழமை ,பங்குத்தந்தை அருட்பணி யூட் குருஸ் அடிகளார் தலைமையில் ,ஜோசப்வாஸ் நகர் மறை ஆசிரியர்களின் வழிநடத்துதலின் கீழ் ஜோசப்வாஸ் நகரில் மாலை 03 ;00 மணியளவில் பங்குமனை வளாகத்தில் நடைபெற்றது .

இன் நிகழ்விற்கு கெளரவ வைத்திய கலாநிதி ,வடமாகாண சபை உறுப்பினர் ஞா .குணசீலன் அவர்களும், ஓய்வு பெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் திரு .அ. அந்தோணிமுத்து ஆசிரியர் அவர்களும்,,மன்/ தோட்டவெளி அ.த.க .பாடசாலையின் அதிபர் திரு .A.N .யோகராஜா அவர்களும் ,நடன பயிற்சி ஆசிரியை திருமதி ராஜ்குமார் லூட்ஸ் அவர்களும் திருமதி ஜேம்ஸ் .றீற்றம்மா அவர்களும் விருந்தினர்களாக வருகைத்தந்திருந்தார்கள் .

ஆரம்ப நிகழ்வாக இறைவணக்கம் செல்வி . கி . பிறைற்றி பயஸ் மற்றும் செல்வி .மெ .மெக்ஸிலின் பேர்ளின் ஆகியோரால் இடம்பெற்றது
.
இறைவழிபாட்டை தொடர்ந்து தலைமை உரையினை அருட்பணி யூட் குரூஸ் அடிகளார் நிகழ்த்தினார்.
அதன் பின்னர் நடனப்பயிற்சி மாணவர்களினால் வரவேற்ப்பு நடனம் நிகழ்த்தப்பட்டதுடன், இவ் நிகழ்விற்கான அறிமுக உரையை ஜேம்ஸ் றீற்றம்மா உதவிகரத்தின் தலைவர் திரு .ஜோன்சன் .கியோமர் பயஸ் அவர்கள் நிகழ்த்தினார் .

பின்னர் நடைபெற்று முடிந்த இசைக்குரல் தேர்வில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களினால் பாடல் பாடப்பட்டது .மாணவர்களின் பாடலை தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து பாடல் போட்டியில் பங்குபெற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நினைவுசின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது .அத்துடன் ஒருவருடமாக தொடர்ச்சியாக நடன பயிற்சியை மேற்கொள்ளுகின்ற ஆசிரியை திருமதி ராஜகுமார் லூட்ஸ் அவர்களுக்கு அன்பளிப்பும் நினைவு சின்னமும் வழங்கப்பட்டது .

இறுதியாக நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது .

நன்றி .
தகவல் -
. ஜோன்சன் .கியோமர் பயஸ் .
தலைவர் .ஜேம்ஸ் றீற்றம்மா சுதாஜினி உதவிக்கரம்.
விடத்தல்தீவு .











ஜேம்ஸ் றீற்றம்மா சுதாஜினி உதவிக்கரம் உதயமாகி ஒருவருட நிறைவு விழாவும் ,அமரர் ஜேம்ஸ் .சுதாஜினி இசைக்குரல் தேர்வு- பரிசளிப்பு நிகழ்வு- 2016 Reviewed by NEWMANNAR on November 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.