📷மன்னார் மூன்றாம்பிட்டி கிராமத்தில் பாதையில் முளைத்த வேலி - அம்மன் ஆலய பரிபாலன சபைக்கும் அடைக்கல மாதா தேவாலய நிர்வாகத்தினருக்கும் இடையே சுமூகமான தீர்வு ..
17-11-2016 அன்று மன்னார் மூன்றாம்பிட்டி வெள்ளாங்குளம் கிராமத்தில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபைக்கும் அடைக்கல மாதா தேவாலய நிர்வாகத்தினருக்கும் இடையே இருந்து வந்த பிணக்கு தீர்விற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்னவெனில் கடந்த பல வருடங்களாக இக்கிராமத்தில் இவ்விரு சமய ஸ்தலங்கள் தத்தமது சமய அனுஸ்டானங்களை கடைப்பிடித்து வந்தனர்
இருந்த போதிலும் தேவாலயத்தின் அண்மித்த பகுதியினாலே நீண்ட காலமாக இந்து சமய ஆலயத்திற்கு சென்று வந்துள்ளனர் இது இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்தவர்களால் கொங்கிறீட் தூண்கள் போடப்பட்டு முள்ளுக்கம்பியினால் பயன்படுத்தப்பட்டு வந்த பாதையும் சேர்த்து அடைக்கப்பட்டது அப்பகுதியிலுள்ள இந்து மக்கள் மத்தியில் பெரும் விசனத்தினை ஏற்படுத்தியது
மேலும் இது தொடர்பாக பல தடவைகள் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்க முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது இந்து சமய மக்களால் பிரதேச செயலாளர் கிராம உத்தியோகஸ்தர் ஆகியோரிடமும் முறையிடப்பட்டது தொடர்ச்சியாக நீண்ட காலம் அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்த பாதையினை விடுவித்து தருமாறு பல இந்து சமய அமைப்பினருக்கும் தமது கோரிக்கையினை முன் வைத்து வந்தனர் இதனடிப்படையில் இந்து சமய ஆர்வலர் பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட தோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இவ்விடயம் தொடர்பாக எடுத்துக்கூறினர்
அகில இலங்கைக்கான சிவசேனை அமைப்பின் தலைவரான திரு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு வரப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட திரு சச்சிதானந்தன் உடன் சைவ மகா சபை பிரதிநிதி சுமுகலிங்கம் அவர்களும் உயர் அதிகாரிகளுடன் கதைத்தனர்
அதன் பின் 17_11_2016 அன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாந்தை மேற்கு பிரதேச செயலக காணி தொடர்பான. உயர் அதிகாரிகள் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இந்து சமய அமைப்பின் பிரதிநிதிகள் சிலரும் பிரசன்னமாகியிருந்தனர் அந்நேரத்தில் இரண்டு பரிபாலன சபையினரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இவ்விரு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த அதிகாரிகள் ஏற்கனவே இந்து சமய ஆலயத்திற்கு செல்லும் பாதையினை திறந்து விடுமாறு பணிக்கப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 13 அடியிலான போக்கு வரத்திற்கான வீதி விடுவதாக தீர்மானிக்கப்பட்டு அனைவரும் எழுத்து மூலம் ஒப்பமிட்டு ஏற்றுக்கொண்டதனையிட்டு சுமூகமாக நீண்டகால பிணக்கு தீர்த்து வைக்கப்பட்து

Reviewed by NEWMANNAR
on
November 18, 2016
Rating:

No comments:
Post a Comment