அண்மைய செய்திகள்

recent
-

📷மன்னாரில் பல பாகங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு-

தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் 'மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்' வடக்கின் பல பாகங்களில் இன்று(27) ஞாயிற்றுக்கிழமை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் 'மாவீரர் தின' நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

உயிர் நீத்த மாவீர்களை நினைவு கூர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதே வேளை மன்னார் மடு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று(27) காலை வவுனியா நகர சபையின் முன்னாள் உப தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் இடம் பெற்ற பெற்றது.

இதன் போது குறித்த துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவிரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.5 மணியளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் -மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





📷மன்னாரில் பல பாகங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு- Reviewed by NEWMANNAR on November 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.