அண்மைய செய்திகள்

recent
-

📷'மன்னார் லீக்கின் வெற்றிக் கிண்ணம்' சம்பியனாகியது சாவற்கட்டு கில்லறி விளையாட்டுக்கழகம்.

📷மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது வெள்ளி (55) இரவு 8.30 மணிக்கு ஜோசவ்வாஸ் நகர் ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கோலாகலமாக நடை பெற்றது.

கடந்த 02 மாதங்களாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 37 கழகங்கள் விலகல் முறையிலான போட்டியில் ஆடி இறுதிப்போட்டிக்கு மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் விளையாட்டுக்கழகமும் , சாவற்கட்டு கில்லறி விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.

இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி குணசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி யுட் குருஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விறுதிப்போட்டியில் இரு அணிகளும் தமது பலப்பரீட்சையைக்காட்ட முயன்றும் போட்டி தொடங்கி 10வது நிமிடத்தில்; கில்லறி அணியின் முன்கள வீரர் தாசன் தலையால் இடித்த கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் சாவற்கட்டு கில்லறி விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

இரசிக்கத்தக்கதும் பாராட்டத்தக்கதும் விறுவிறுப்பானதுமாக போட்டி காணப்பட்டது. இறுதிவரை போராடியும் வெற்றிக்கிண்ணம் கில்லறியிடம் சென்றது.

ஆட்டநாயகனாக கில்லறி விளையாட்டுக்கழக வீரர் தாசன்; தெரிவு செய்யப்பட்டார்.

1ம் 2ம் இடங்களைப்பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் , சிறந்த வீரருக்கு கிண்ணமும் ,இச்சுற்றுப்போட்டியில் சிறந்த கட்டுப்பாட்டுடன் வளர்ந்து வரும் சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்ட காத்தாங்குளம் சென் ஜோசப் அணிக்கு பாராட்டுக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட் , செயலாளர் ஞானராஜ் , பொருளாளர் கோல்டன் டெனி ,உப தலைவர்களான பிறேம்குமார் , சுகிர்தன் , டிகோணி ,உபசெயலாளர் சுவேந்திரன் , உபபொருளாளர் றொணி மற்றும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழக அமைப்பாளர் கிங்ஸ்லி , கழக செயலாளர் டெலிஸ்டன் மற்றும் ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட இரசிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.







📷'மன்னார் லீக்கின் வெற்றிக் கிண்ணம்' சம்பியனாகியது சாவற்கட்டு கில்லறி விளையாட்டுக்கழகம். Reviewed by NEWMANNAR on November 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.