பதவி விலகும் ஒபாமாவிற்கு பரிசு வழங்கி அசத்திய விளாடிமிர் புடின்....
பெரு நாட்டில் நடைபெற்று வரும் ஆசியா-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஒபாமாவிற்கு ரஷ்ய அதிபர் பரிசு ஒன்றை வழங்கி அசத்தியுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் ஆசியா-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் இந்த மாநாட்டில் நேற்று பங்கேற்றுள்ளனர்.
அப்போது, இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேராக சந்தித்து உரையாடியுள்ளனர்.
சுமார் 4 நிமிடங்கள் பேசிய இருவரும் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தை எதிர்க்கொள்வது தொடர்பாக பேசியுள்ளனர்.
இந்த உரையாடலுக்கு பிறகு புடின் செய்தியாளர்களை சந்தித்தபோது ‘மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்து பேசியதாக’ பேட்டியளித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக பதவி முடிவு பெறும் நிலையில் ஒபாமாவிற்கு பரிசு ஒன்றை அளித்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு பிறகு ஒபாமா விரும்பினால் அவர் ரஷ்யா நாட்டிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும், இதனை ரஷ்ய குடிமக்களும் எதிர்ப்பார்ப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
எனினும், புடினின் இந்த கோரிக்கைக்கு ஒபாமா என்ன பதிலளித்தார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகும் ஒபாமாவிற்கு பரிசு வழங்கி அசத்திய விளாடிமிர் புடின்....
Reviewed by Author
on
November 21, 2016
Rating:

No comments:
Post a Comment