இராணுவத்திடமுள்ள காணியை விடுவிக்குமாறு இரா.சம்பந்தனிடம் கோரிக்கை....
இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யுத்த பாதிப்பிற்கு உள்ளாகிய பாடசாலைக்குத் தேவையான வளங்களை பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த கோரிக்கைகளை வெகு விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக எதிர்கட்சித்தலைவர் பாடசாலை சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டடுள்ளனர்.
மேலும் இந்த சந்திப்பையடுத்து இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் கேட்டறிவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அந்த பகுதிக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்திடமுள்ள காணியை விடுவிக்குமாறு இரா.சம்பந்தனிடம் கோரிக்கை....
 
        Reviewed by Author
        on 
        
November 21, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
November 21, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment