அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்'இளைஞர் படையணி'பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம்-Photos



-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இன்று (1) செவ்வாய்க்கிழமை காலை குறித்த நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை சந்தியில் அமைக்கப்பட்ட 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக விசேட அதிரடிப்படையினர்(எஸ்.ரி.எப்) பாரிய முகாமாக குறித்த பயிற்சி நிலையத்தை பயண்படுத்தி வந்தனர்.

விசேட அதிரடிப்படையினரின் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் குறித்த பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்தது.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலையின் போது குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் முதல் முதலாக கடற்படையினர் தமது முகாமை அமைத்திருந்தனர்.

-குறித்த பயிற்சி நிலையத்தின் பின் பகுதியில் கடல் காணப்பட்டமை மற்றும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி என்பதனையும் கருத்தில் கொண்டு கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கடற்படையினர் பாரிய முகாமை அமைத்து சோதனை நடவடிக்கைகளை ஈடுபட்டு வந்தனர்.

கடற்படையினர் குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியேறிய நிலையில் பல மாதங்களாக குறித்த பயிற்சி நிலையத்தை உரிய அதிகாரிகள் பெறுப்பேற்றுக்கொள்ளாத நிலையில் குறித்த நிலையத்தில் பல்வேறு துஸ்பிரையோக சம்பவங்கள் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் குறித்த பயிற்சி நிலையத்தை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தமது முகாமாக மாற்றி செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை உரிய திணைக்களத்திடம் மீள ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தின் நிலமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு உடனடியாக அங்கு நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு உரிய திணைக்களத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு இன்று 1 ஆம் திகதி உரிய திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என உறுதியளித்தார்.

இதற்கு அமைவாக மன்னார் தலைமன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்ட நிலையில் குறித்த நிலையம் உரிய திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார்'இளைஞர் படையணி'பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம்-Photos Reviewed by NEWMANNAR on November 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.