சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இறுதி பட்டியலில் இந்திய மாணவி...
சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதி பட்டியலில் மாணவி கேகசன் பாசு இடம் பெற்றுள்ளார்.
துபாயில் உள்ள தேரா சர்வதேச பள்ளிக்கூடத்தில் படித்து வரும் இந்திய மாணவி கேகசன் பாசு(16). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பருவநிலை மாறுபாடு, உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது ‘கிரீன் கோப்’ அமைப்பில் 1,000 பேர் தன்னார்வ தொண்டர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கல்வியை சிறப்பான முறையில் படித்து வருவதற்காக இந்திய அரசின் விருதுகளையும், இசை, நடனம், பேச்சுப்போட்டி ஆகியவற்றில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசுகளை வாங்கி குவித்துள்ளார் கேகசன் பாசு.
இந்த நிலையில் சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதி பட்டியலில் மாணவி கேகசன் பாசு இடம் பெற்றுள்ளார். இந்த பரிசு பெறுபவர் பெயர் அடுத்த மாதம் 2-ஆம் திகதி நெதர்லாந்து நாட்டில் அறிவிக்கப்படும்.
அமைதி பரிசை, நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் வழங்க இருக்கிறார். சான்றிதழுடன், ஒரு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சத்து 20 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும்.
சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இறுதி பட்டியலில் இந்திய மாணவி...
Reviewed by Author
on
November 20, 2016
Rating:
Reviewed by Author
on
November 20, 2016
Rating:



No comments:
Post a Comment