கோபத்தில் கத்திய ஜனாதிபதி ஒபாமா: பிரசாரத்தில் சலசலப்பு....
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி ஒபாமா தமது கட்சி ஆதரவாளர்களால் கோபத்தில் கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் களம் உச்சத்தை எட்டியுள்ளது. இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் முக்கிய வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஹிலாரி ஆகியோர் சுறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு முக்கிய கட்சியினரும் தங்களின் ஆதரவாளர்களை களம் இறக்கி தேர்தல் பிரசாரத்தை முடிக்கு விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கரோலினா மாகாணத்தின் வடபகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக ஜனாதிபதி ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
குறித்த பொதுக்கூட்டத்தில் ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் திரளாக கூடியிருந்தனர். தமது உரையை துவங்கிய ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட்டத்தில் ஆங்காங்கே ஏற்பட்ட சலசலப்புகள் பொறுமை இழக்க வைத்துள்ளது.
குழுமியிருந்த கூட்டத்தினர் எவரும் ஒபாமா பேசுவதை செவிகொடுத்து கேட்பதாக இல்லை. பொறுமை இழந்த ஒபாமா பலமுறை இங்கு கவனியுங்கள், இங்கு கவனியுங்கள் என கூட்டத்தை அமைதிபடுத்த முயன்றார் ஆனால் கட்டுப்படியாத கூட்டம் தொடர்ந்து சலசலப்பில் ஈடுபட்டது.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜனாதிபதி ஒபாமா கூட்டத்தினரை பார்த்து கத்தியுள்ளார். பொதுக்கூட்டத்தினிடையே சலசலப்பிற்கு காரணம், டிரம்ப் ஆதரவாளரான முதியவர் ஒருவர் ஒபாமாவின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் பதாகையை தூக்கியவாறு எழுந்து நின்றுள்ளார்.
இதைக்கண்ட ஹிலாரி ஆதரவாளர்கள் அவரிடம் தகராறில் ஏற்பட்டு பதாகையை பறித்து தூர வீச முயன்றுள்ளனர்.
இதை கவனித்த ஒபாமா, அந்த முதியவரிடம் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். அவர் அவரது வேட்பாளரை ஆதரிக்கிறார். அவரால் இங்கு எதுவும் செய்ய முடியாது. அதனால் அவர் குறித்து எவரும் கவலை கொள்ள தேவை இல்லை என்று ஜனாதிபதி ஒபாமா தொடர்ந்து வலியுறுத்தினார்.

கோபத்தில் கத்திய ஜனாதிபதி ஒபாமா: பிரசாரத்தில் சலசலப்பு....
Reviewed by Author
on
November 06, 2016
Rating:

No comments:
Post a Comment