1850 அடி உயர பாலத்தில் நின்று காதலை வெளிப்படுத்திய இளைஞன்!
தன் காதலியிடம் தன்னை மணக்குமாறு வித்தியாசமாக சொல்ல வேண்டும் என ஒரு இளைஞர் 1850 அடி உயர பாலத்திலிருந்து Will You Marry Me என்னும் வாசகத்தை கையில் பிடித்த நின்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா நாட்டில் வசித்து வருபவர் Keow Wee Loong (28). புகைப்பட கலைஞரான இவர் தனது பணி விடயமாக ஜப்பான் நாட்டிற்கு செல்லும் போது அங்கு Marta (24) என்னும் பெண்ணை பார்த்து காதல் வசப்பட்டுள்ளார்.
பிறகு Martaவும் இளைஞர் Keowவை காதலிக்க தொடங்க இருவரும் பல ஊர்களுக்கு செல்வது என அன்யோன்யமாக இருந்து வந்தார்கள்.
தன் காதலி மீது மிகுந்த அன்பு வைத்திருந்த Keow, அவரிடம் வித்தியாசமாக தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினார்.
அதன் படி தன்னுடன் வேலை செய்யும் நண்பர் Abraham என்னும் வீடியோ எடுக்கும் கலைஞரிடம் யோசனை கேட்டார். அதன் படி உலகில் உள்ள எதாவது உயரமான இடத்திலிருந்து தன் திருமண விருப்பத்தை தன் காதலியிடம் சொல்ல Keow முடிவெடுத்தார்.
அதன்படி இணையம் மூலம் அவர்களில் இதை தேடுகையில் சீனாவில் உள்ள புகழ்பெற்ற 1850 அடி உயரம் கொண்ட Beipanjiang பாலத்தில் உச்சியில் Will You Marry Me என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி கொண்டு நிற்க அதை அவர் நண்பர் Abraham வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த Keow - ன் காதலி Marta கூறியதாவது, Keow என்னிடம் வித்தியாசமாக எதாவது உனக்காக செய்வேன் என எப்போதும் கூறுவார். ஆனால் என்னிடம் திருமண கோரிக்கை வைக்க இப்படிப்பட்ட ஆபத்தான விடயத்தை மேற்கொள்வார் என நான் நினைக்கவேயில்லை.
அந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. நாங்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
1850 அடி உயர பாலத்தில் நின்று காதலை வெளிப்படுத்திய இளைஞன்!
Reviewed by Author
on
December 02, 2016
Rating:

No comments:
Post a Comment