அண்மைய செய்திகள்

recent
-

ஓய்வுபெறும் காலத்தில் பொது மன்னிப்புக் கேட்ட பான் கீ மூன்!


இந்த மாதத்தோடு ஓய்வுபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பொது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைத்தி நாட்டில் பரவிய கொலரா நோயைகட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

கரிபியன் கடற்பகுதியையொட்டி, வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டுவரை ‘கொலரா’எனப்படும் வாந்திபேதி நோயால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை.

இருப்பினும், அதன்பிறகு அங்கு சென்ற ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த நேபாள நாட்டு இராணுவ வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய குப்பைக்கழிவுகளை ஹைத்தி நாட்டில் ஓடும்பிரதான ஆற்றில் வீசியதால் கடந்த 2011ஆம் ஆண்டு இங்கு கொலரா நோய் பரவ ஆரம்பித்தது.

மிக குறுகிய காலத்தில் சுமார் 80 ஆயிரம் மக்களை கொலரா நோய் தாக்கியது. ஐ.நா.சபையின்அமைதிப்படையின் நற்பெயருக்கும் நோக்கத்துக்கும் களங்கம் கற்பித்துவிட்ட இந்நோயை கட்டுப்படுத்த தவறிய வேளையிலும், இந்நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சுமார் 20 கோடி அமெரிக்க டொலர்களை தொகுப்பு நிதியாக திரட்ட ஐக்கிய நாடுகள் சபை முயற்றி செய்துவருகிறது.

ஆனால், உரிய நேரத்தில் இந்த நோயை கட்டுப்படுத்த தவறியமைக்காக ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவிப்பதாகவும், ஹைத்தி மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைமை அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடந்த பத்தாண்டுகளாக பான் கீ
மூன் பதவி வகித்துவருகிறார்.

இந்த மாதத்துடன் அந்த பதவியில் இருந்து ஓய்வுபெறும் பான் கீ மூன் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப்போரின் போது பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட பான் கீ மூன் பொது மக்களை காப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்று வெளிப்படையாக வருத்தம் வெளியிட்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில்தான் ஹைத்தி நாட்டில் பரவிய காலரா நோயை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஓய்வுபெறும் காலத்தில் பொது மன்னிப்புக் கேட்ட பான் கீ மூன்! Reviewed by Author on December 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.